இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனில் தொடர்ச்சியாக எட்டு தோல்விகளுக்குப் பிறகு ஐபிஎல் 2022 தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியாக இருக்கிறது. இருப்பினும், நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பற்றியது. கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பிறந்தநாள் பரிசாக இந்த முதல் வெற்றி அமைந்ததாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


அதேபோல், ஐபிஎல் தொடரில் மற்றொரு வெற்றிகரமான அணியாக இருந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஆரம்பம் முதல் தடுமாற்றம்தான். இதுவரை நடந்த 8 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்தது. இதனால் கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் கனவு மங்கியது என்றே சொல்லலாம். 




இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில் மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன. ஆனால், இந்தாண்டு சொல்லி கொள்ளும்படி இரு அணிகள் பெரிதாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் ப்ளே ஆப் வாய்ப்பு உள்ளது. எப்படி என்று கேட்டால் அதற்கும் எங்களிடம் பதில் இருக்கிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பா..? 


முன்னதாக, இந்த தொடரில் இருந்து வெளியேறிய மும்பை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 1 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், சென்னை அணி இதுவரை 8 போட்டிகளில் 2 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்பிறகு சென்னை அணிக்கு 6 போட்டிகளில் இன்னும் ஆறு போட்டிகள் விளையாட உள்ளது. மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், 16 புள்ளிகள் கிடைக்கும். CSK ஐபிஎல் 2022 இல் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு, நல்ல ரன் ரேட்டில் வெற்றிபெற வேண்டும். 


சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்களுக்குச் செல்ல இனி வரும் போட்டியில் ஒன்றில் கூட தோற்காமல் இருக்க வேண்டும். அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெறுவதன் மூலம் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 


மும்பை அணி மீதமுள்ள அணிகளை தோல்வியடைய செய்வதன் மூலம் புள்ளி பட்டியலில் இருந்து மற்ற அணிகள் கீழே இறங்கும். அந்த நேரத்தில் சென்னை அணி தொடர்ச்சியாக 6 ல் வெற்றிபெற்று மேலே ஏறும். இறுதியாக ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம். சென்னை அணிக்கு அடுத்த 6 போட்டிகள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு மும்பை அணியின் வெற்றியும் முக்கியம். 




தோனி என்னும் மாயக்காரன் :


நேற்று திடீரென சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். வழக்கம்போல், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து மீண்டும் சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று ரசிகர்கள் ட்விட்டரில் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த 2010 ம் ஆண்டு சென்னை அணி 5 க்கு 5 வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலைமை இருந்தது. அப்பொழுதும் தோனி தனது மேஜிக் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை அணியை தகுதி பெற செய்து அந்த தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண