நடுப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.


ஆட்டத்தை தொடங்கிய சென்னைக்கு ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்களில் அவுட்டாகி  அதிர்ச்சியளித்தார். இதையடுத்து, களமிறங்கிய மொயின் அலி ருத்ரதாண்டவம் ஆடினார். சென்னை கேப்டன் தோனி சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், சாஹல் பந்தில் 26 ரன்களில் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த பிறகு கடைசி ஓவரில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி 93 ரன்களில் மெக்காய் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மொயின் அலி 57 பந்துகளில் 13 பவுண்டரி 3 சிக்ஸருடன் 93 ரன்களில் அவுட்டாகினார். இதனால், சென்னை அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தது.


இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணிக்கு, ஜேஸ்வால், பட்லர் ஓப்பனிங் களமிறங்கினர். பட்லர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜேஸ்வால் தனது அதிரடியை தொடர்ந்தார். சஞ்சு சாம்சன், படிக்கல் ஆகியோர் அவுட்டாக அஷ்வின் 40 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவர்களது ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக இருந்தது. இதனால், 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, போட்டியை கைப்பற்றி இருக்கிறது ராஜஸ்தான். இந்த போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றதன் மூலம், 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது. இதன் மூலம், ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது.  சொதப்பலாக ஆடிய சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது.






இன்றைய போட்டியில் டாஸின்போது பேசிய தோனி அடுத்தாண்டு கிரிக்கெட் விளையாடுவதை உறுதி செய்தார். அவர் டாசிற்கு பிறகு கூறியதாவது, சென்னை அணிக்காக அடுத்தாண்டு நிச்சயமாக விளையாடுவேன். ஏனென்றால், அப்படி செய்யாவிட்டால் அது சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது போலாகிவிடும். சென்னை ரசிகர்களுக்காக அது செய்வேன்.” என்று கூறினார்.