சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்த தொடரில் தனது கடைசி போட்டியில் இன்று ஆடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது கடைசி போட்டியில் ஆடும் சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலே அவுட்டாகிய நிலையில் ஒன் டவுன் வீரராக களமிறங்கிய மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சைத் துவம்சம் செய்தார்.
சென்னை அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 75 ரன்களை எடுத்தது. குறிப்பாக, மொயின் அலி 19 பந்துகளில் அரைசதம் விளாசி இந்த தொடரில் குறைந்த பந்தில் அரைசதம் விளாசிய சென்னை வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தற்போது வரை 21 பந்தில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 59 ரன்களை விளாசியுள்ளார். குறிப்பாக, ட்ரெண்ட் போல்ட் வீசிய ஒரே ஓவரில் 1 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி சென்னை ரசிகர்களை குஷியடைய வைத்தார்.
சென்னை அணிக்காக அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, சுரேஷ் ரெய்னா 14 பந்தில் அரைசதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்