ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூர் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகளின்போது எப்பேற்பட்ட நெருக்கடியான சூழலிலும் மிகவும் அமைதியாகவே காணப்படுபவர் தோனி.


இதன் காரணமாகவே அவர் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படுகிறார். ஆனாலும், நேற்றைய போட்டியில் அவரையே இளம் பந்துவீச்சாளர் பதிரா கோபப்படுத்தி விட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


குறுக்கே வந்த பதிரானா:


ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட சென்னை அணியின் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சற்று சொதப்பலாகவே இருந்தது. ஆட்டத்தின் 16வது ஓவரை மதீஷா பதிரானா வீசினார். அப்போது, ஹெட்மயர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் பதிரானா பந்தை புல் – ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்து சரியாக படவில்லை. இருப்பினும் அவர் ஒரு ரன் எடுக்க ஓடினார்.


அப்போது, அந்த பந்தை பிடித்த தோனி எதிர்முனையில் ஓடிய ஹெட்மயரை ரன் – அவுட் செய்ய பந்தை வீசினார். ஆனால், அப்போது பந்துவீசிவிட்டு பிட்சில் நின்ற பதிரா, தோனி பந்தை தன்னிடம்தான் வீசுகிறார் என்று நினைத்துக் கொண்டு பந்தை பிடிக்க முயற்சித்தார். அதற்குள் ஹெட்மயர் ஒரு ரன் எடுத்துவிட்டார்.






கோபப்பட்ட பதிரானா:


ரன் அவுட் செய்ய முயற்சித்து வீசிய பந்தை, பதிரா பிடித்ததால் தோனியே கோபப்பட்டார். அவர் பதிராவிடம் குறுக்கே வந்துவிட்டாய் என்பது போல கத்தினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணியில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரராக பதிரானா இருந்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 48 ரன்களை வாரிக்கொடுத்தார்.


ஆகாஷ்சிங் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 32 ரன்கள் வழங்கினார். தேஷ்பாண்டே 42 ரன்களையும் வாரி வழங்கினர். தீக்‌ஷனா மட்டும் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணிக்காக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 77 ரன்களும், துருவ் ஜோயல் 34 ரன்களும், தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் 27 ரன்களும் விளாசினர், தொடர்ந்து 203 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம்துபே அதிரடியாக ஆடினர். ஆனாலும், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது.


மேலும் படிக்க: Ponniyin Selvan 2 LIVE: ரிலீசானது பொன்னியின் செல்வன் 2 ... கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்டுகள் உடனுக்குடன்..!


மேலும் படிக்க: Ponniyin Selvan 2 Twitter Review: நாவல் முழுமை பெற்றதா? .. பொன்னியின் செல்வன்-2 ரசிகர்களை கவர்ந்ததா? .. ட்விட்டர் விமர்சனம் இதோ..!