Ponniyin Selvan 2 LIVE : பாராட்டுக்களை குவித்து வரும் பொ.செ குழுவினர்
இயக்குநர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ஆர், ஒளிபதிவாளர் ரவி வர்மன் ஆகியோரை தாண்டி, இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
Ponniyin Selvan 2 LIVE : பொ.செவை பேனர் வைத்து கொண்டாடும் கமல் ரசிகர்கள்!
முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிக்கு டப்பிங் செய்த கமல் ஹாசனுக்காக, அவரின் ரசிகர்கள் திரையரங்கின் வாசலிற்கு முன் பேனர் வைத்து கொண்டாடியுள்ளனர்.
Ponniyin Selvan 2 LIVE : மனதை கொள்ளையடிக்கும் 'அக நக அக நக' பாடல்!
"முதல் பாகத்தில் செம வைரலான அக நக அக நக பின்னணி இசை, இந்த பாகத்தில் தனி பாடலாக இசை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாடல் காட்சியில், கார்த்தி வந்தியத்தேவனாகவும் த்ரிஷா குந்தவையாகவும் வாழ்ந்துள்ளனர்." - ரசிகர் ஒருவரின் ட்வீட்
Ponniyin Selvan 2 LIVE : அவதார் 2 படத்தை மிஞ்சியதா பொன்னியின் செல்வன் 2 ?
"இப்படம் இந்திய சினிமாவுக்கு பெருமையை பெற்று தந்துள்ளது. ஹாலிவுட் ரசிகர்களே மன்னித்துவிடுங்கள். பொன்னியின் செல்வன் 2 அவதார் 2 படத்தை விட நன்றாக உள்ளது." - ரசிகர் ஒருவரின் ட்வீட்
Ponniyin Selvan 2 LIVE : விட்டுக்கொடுக்காமல் பேசும் தெலுங்கு சினிமா ரசிகர்கள்..
“பொன்னியின் செல்வனை, பாகுபலியுடன் ஒப்பிடாதீர்கள். கதை, க்ராபிக்ஸ் காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்தும் பாகுபலியில் சிறப்பாக இருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருந்த கதாபாத்திரங்கள் என் நினைவில் கூட இல்லை. பொதுவான சினிமா ரசிகர்களுக்கு பொ.செ படம் புரியாது.” என தெலுங்கு சினிமா ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
Ponniyin Selvan 2 LIVE : பலாசோ திரையரங்கத்தில் தொழில்நுட்ப கோளாறு!
சென்னை வடபழனியில் உள்ள ஃபாரம் விஜயா மாலின் பலாசோ திரையரங்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்ப்பட்டுள்ளது. இதனால், படத்தை ஐமாக்ஸ் திரையரங்கில்தான் காண்பேன் என கூடிய பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Ponniyin Selvan 2 LIVE : திருச்சியில் வெறிச்சோடி காணப்படும் திரையரங்குகள்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய திரையரங்குகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கத்தை விட கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது
திருச்சியில் பெரும்பாலான திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கு முழு டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை.
Ponniyin Selvan 2 LIVE : சுதந்திர தேவி சிலை முன் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு விளம்பரம்!
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை முன் ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்துக்கு விமானம் மூலமாக விளம்பரம் செய்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
Ponniyin Selvan 2 LIVE : உருக்கமாக பதிவிட்ட நடிகர் கார்த்தி
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி, “குருவே, உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் விலை மதிப்பு இல்லாதது. ” என இயக்குநர் மணிரத்தினத்தை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Ponniyin Selvan 2 LIVE : கல்கியின் கைவண்ணத்திற்கு பெருமை சேர்த்த மணிரத்தினம்
பெரும் நட்சத்திர பட்டாளத்தை இறக்கி, அவர் அவர்களுக்கான இடத்தை ஒதுக்கி அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் மணிரத்தினம் அழகாக காட்டியுள்ளதாக படம் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
Ponniyin Selvan 2 LIVE : ஹார்டின்களை பறக்கவிடும் சியான் ரசிகர்கள்..
ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை அருமையாக கையாண்டுள்ளதாகவும், தான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள், விக்ரமை விமர்சித்துள்ளனர்
Ponniyin Selvan 2 LIVE: 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2!
பொன்னின் செல்வன் 2’ திரைப்படம் 4DX அதாவது CJ 4D PLEX திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 4DX திரையரங்குகளில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை பொன்னியின் செல்வன் 2விற்கு உரியது.
4DX என்றால் என்ன? : இது, CJ 4D PLEX என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திரையரங்குகள் ஆகும். இந்த திரையரங்குகளில் திரைப்படத்தில் மூடுபனி, காற்று, நீர் ஆகியவற்றை உள்ளடக்கிய காட்சிகள் திரையில் தோன்றும் போது அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் வகையில் திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள திரையரங்கில் 4DX வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ponniyin Selvan 2 LIVE : ட்ரெண்டிங்கில் இருக்கும் பொன்னியின் செல்வன் 2 ஹாஷ்டாக்
இந்தியாவின் உள்ள முக்கிய நகரங்களில் பொன்னியின் செல்வனின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடித்து முடிந்தது. அந்நிகழ்ச்சிகளில் பேசிய பொ.செ படத்தின் நடிகர்களின் பேட்டி வைரலாகி வருகிறது.
Ponniyin Selvan 2 LIVE: 9 மணிக்கு திரையிடப்படவுள்ள முதல் காட்சி..
பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸானபோது காலை 4:30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லாத காரணத்தால், காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.
Ponniyin Selvan 2 LIVE: வேலை நாட்களிலும் பொன்னியின் செல்வன் 2 பார்க்க ஆர்வம் காட்டும் ரசிகர்கள்..!
உலகமெங்கும் பொன்னியின் செல்வன் 2 இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் நாளே படம் பார்க்க ரசிகர்கள் யாரும் காட்டி வருகின்றனர். வேலை நாளான இன்று பெரும்பாலான பகல் காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
Ponniyin Selvan 2 LIVE: தமிழ்நாடு தவிர பிற இடங்களில் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பொன்னியின் செல்வன் 2 படம் உலகமெங்கும் வெளியானது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
Background
Ponniyin Selvan 2 Movie Review Release LIVE Updates: இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இயக்குநர் மணி ரத்னத்தால் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. மேலும் இப்படம் வசூலில் 500 கோடியை தாண்டியதாக சொல்லப்படுகிறது.
நட்சத்திர பட்டாளம்
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி,விக்ரம், த்ரிஷா, பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு,ஜெயராம், லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது.
முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன்,சிலம்பரசன், இயக்குநர் பாரதிராஜா, அமைச்சர் துரை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் குரலில் 2 ஆம் பாகத்தின் தொடக்க காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து படத்தின் ஸ்னீக் பீக் காட்சி நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) ஆம் தேதி வெளியானது. இதில் வந்தியத்தேவன் (கார்த்தி) மற்றும் ஆழ்வார்க்கடியன் நம்பி (ஜெயராம்) தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படியான நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, பார்த்திபன், ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் பேசிய அனைவரும் பட ஷூட்டிங்கில் நடைபெற்ற சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் அனைவருமே கண்கலங்கினர். மேலும் நெகிழ்ச்சியாக பேசினர்.
சிறப்பு காட்சிகள் இல்லை
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு காலை 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 2 ஆம் பாகத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இந்த படத்திற்கு முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த நிலை நிலவுகிறது.
அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படம் ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவில் படத்திற்கு காலை 5 மற்றும் காலை 6 மணி சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.