அணியில் இருக்கிறோமோ இல்லையோ, சிஎஸ்கேவில் எப்போது “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லா...ல..லா...தான். 2022 ஐபிஎல் தொடருக்காக தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டு சில முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது சென்னை அணி. இந்நிலையில், 2021 ஐபிஎல் ஞாபகங்கள் என ஒரு வீடியோவை எடிட் செய்து பதிவேற்றியுள்ளது மஞ்சள் ஆர்மி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


சுவாரஸ்யமான பட்டியலாக வெளியானது ஐபிஎல் 2022 தொடருக்காக தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரம். இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது. 






அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 30-ம் தேதி அறிவித்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு பேர் தக்க வைக்கப்பட்டனர். இதில் எதிர்ப்பார்த்த நான்கு வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், எதிர்ப்பார்க்காத வகையில் தோனியைவிட அதிக விலை கொடுத்து தக்க வைக்கப்பட்டிருக்கிறார் ஜடேஜா. இந்நிலையில், டு ப்ளெசி, பிராவோ, ரெய்னா, ஷர்துல் தாகூர், தீபக் சஹார் உள்ளிட்ட சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


எனினும், எப்போதும் ஒரே குடும்பம், சூப்பர் குடும்பம், பாசக்குடும்பம் என மெச்சிக் கொள்ளும் சிஎஸ்கேவில், இப்போது தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களை பட்டியலிட்டு சிஎஸ்கே வெளியிட்டிருக்கும் பதிவுக்கும் டு ப்ளெசி, பிராவோ ஆகியோர் கமெண்ட் செய்திருக்கின்றனர். ப்ராவோ, அந்த பதிவிற்கு “வாழ்த்துகள்” எனவும், டுப்ளெசி, கைதட்டல்களையும் கமெண்ட் செய்திருந்தார். 


இந்நிலையில், சென்னை அணியின் அதிகார்ப்பூர்வ பக்கத்தில் 2021 ஐபிஎல் தொடரில் நடந்த நிகழ்வுகளை வீடியோவாக எடிட் செய்து, ‘சூப்பர் ஃபேமிலி மெமரீஸ்’ என கேப்ஷன் போட்டு பகிர்ந்திருக்கிறது. பயிற்சி ஆட்டத்தின்போது எடுத்த புகைப்படங்கள், ப்ளூப்பர் வீடியோக்கள், மொமெண்ட்ஸ் என 3.30 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை பார்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண