ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சில ஐபிஎல் அணிகள் ஏலத்தில் இடம்பெற்றுள்ள ரிஷ்ப் பண்ட் மற்றும் கே.எல் ராகுலை எடுக்க போட்டி போடும் நிலையில் இவர்களின் ஏல விலை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார் பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா. 

ஐபிஎல் மெகா ஏலம் 2025 :

2025 ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் ஜித்தா நகரில் நடைப்பெற உள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் இந்த ஏலத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 1165 இந்திய வீரர்களும் 409 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவார். வீரர்களை ஏலம் எடுப்பதற்காக  ஒவ்வொரு அணிக்கும் தலா 120 கோடி ஏலத்தொகையாக வழங்கப்பட்டது. 

இந்த தொகையில் இருந்து ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களுக்கான சம்பளத்தை வழங்கும். வீரர்கள் தக்க வைத்த தொகை போக மீதமுள்ள பணத்தை ஏலத்தில் பயன்படுத்துவர். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகப்பட்சமாக  110.5 கோடியை வைத்துள்ளது.அ அதற்கு அடுத்தப்படியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியிடம் 83 கோடி உள்ளது. சென்னை மற்றும் மும்பை அணியிடம் முறையே 55 மற்றும் 45 கோடியை கையில் வைத்துள்ளது. 

தலைவலி கொடுக்கப்போகும் பஞ்சாப்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கண்டிப்பாக தேவைப்படுவார். இதற்கான காரணம் என்னவென்றால் எம்.எஸ் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பர் யாரும் இல்லை. இதன் காரணமாக சென்னை அணி ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், இஷன் கிஷன் ஆகிய மூவரில் யாராவது ஒருவரை ஏலத்தில் எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. ஆனால் இவர்கள் ஏலத்திற்கு வந்தால் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. குறிப்பாக  பஞ்சாப் அணி கண்டிப்பாக அதிக தொகை கொடுத்தாவது ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும். இந்த வீரர்கள் மட்டுமில்லாமல் வேறு எந்த ஒரு முக்கிய வீரர் ஏலத்திற்கு வந்தாலும் பஞ்சாப் அணி நிச்சயமாக அந்த வீரரை முயற்சி செய்யும், ஒரு வேளை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனாலும் அந்த வீரரின் ஏலத்தொகையை அதிகமாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும். இதன் காரணமாக மற்ற அணிகளும் வீரர்களை எடுப்பதில் சிக்கலை உருவாக்கி விடும் வேலையை பஞ்சாப் அணி நிச்சயம் பார்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. 

இதையும் படியுங்கள்: Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி

அணிகளில் மீதமுள்ள தொகை:

சென்னை சூப்பர் கிங்ஸ் 55 கோடி
மும்பை இந்தியன்ஸ் 45 கோடி 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 51 கோடி
குஜராத் டைடன்ஸ் 69 கோடி 
ராஜஸ்தான் ராயல்ஸ் 41 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 45 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 83 கோடி 
டெல்லி கேபிடல்ஸ் 73 கோடி
பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடி 
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 69 கோடி