IPL Auction 2024: டிராவிஸ் ஹெட்டுக்கு மல்லுகட்டிய அணிகள்; ரூ. 6.80 கோடிக்கு தட்டித் தூக்கிய ஹைதராபாத்

ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

Continues below advertisement

துபாயில் நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல்-லுக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 6 கோடியே 80 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசி ஆஸ்திரேலியா 6வது உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். இவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 6 கோடியே 60 லட்சம் வரைக்கும் ஏலம் கேட்டது. 

Continues below advertisement

ஆஸ்திரேலியா அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூபாய் 20 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளார். இவரை சன் ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் சாம் கரன் ரூபாய் 18 கோடியே 50 லட்சத்துக்கு அதிகப்படியாக விலைக்குச் சென்ற வீரர் ஆவார்.  இவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இரண்டாவது வீரர் ஆவார். ஏற்கனவே ஹைதராபாத் அணி டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுத்துள்ளது.  ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் சதம் விளாசி ஆஸ்திரேலியா அணி ஒரே ஆண்டில் ஐசிசி கோப்பைகளை மகுடம் சூட காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுள்ளார். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல் ஐசிசி டிராபிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஒரே ஆண்டில் வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. மிட்ஷெல் ஸ்டார்க்குக்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு போன வீரர் வரிசையில் பேட் கம்மின்ஸ் உள்ளார். 

இவர்களுக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேரில் மிட்ஷெல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 14 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் அரையிறுதிப் போட்டியிலும் சதம் விளாசினார். இந்திய தற்பவெட்ப சூழலுக்கு ஏற்ப டேரில் மிட்ஷெல் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுவார் என்பதால் சென்னை அணிக்கு அவர் மிகவும் பலமான வீரராக இருப்பார். நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீரர் இவர்தான். 

பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கிய வீரர்களில் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்படும் வீரர் ஹர்ஷல் பட்டேல். இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடிக்கு வாங்கியுள்ளது. நடந்து முடிந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேல். நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன நான்காவது வீரர் இவர்தான். 

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன ஐந்தாவது வீரராக அல்ஜாரி ஜோசப். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.50 கோடிக்கு வாங்கியுள்ளது. 

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. டாப் 5 வீரர்களில் கூட 4 வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஒருவர் மட்டும்தான் பேட்ஸ்மேனாக உள்ளார். 

 

Continues below advertisement