2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வருகின்ற டிசம்பர் 19ம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதே நேரத்தில், இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பதிவுசெய்ய இன்றே கடைசி நாள். முன்னதாக, ஐபிஎல் ஏலத்திற்கான பதிவுக்கான கடைசி தேதி நவம்பர் 30 என பிசிசிஐ நிர்ணயித்தது. இன்றைய நாளை வீரர்கள் விட்டுகொடுத்தால் அதன்பிறகு ஏலத்தில் பதிவு செய்ய முடியாது. 


டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறும் ஏலத்தில் பல முன்னணி வீரர்களின் பெயர்களை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி நடக்கும். சமீபத்தில், ஐபிஎல் அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட்டது. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அனைத்து அணிகளும் பல முக்கிய வீரர்களை வெளியிட்டு, இன்னும் பந்தயத்தில் வேகம் காட்ட இருக்கின்றன. 


வீரர்களை விடுவித்த பிறகு அணிகளிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?


RCB - 40.75 கோடி
SRH - 34 கோடி
KKR - 32.7 கோடி
CSK - 31.4 கோடி
PBKS - 29.1 கோடி
DC - 28.95 கோடி
MI - 15.25 கோடி
RR - 14.5 கோடி
LSG - 13.9 கோடி 
GT - 13.85 கோடி


அதிக பணத்தை கையில் வைத்திருக்கும் RCB: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிகபட்சமாக ரூ.40.75 கோடியை தங்களது பர்ஸில் வைத்துள்ளது. இந்த அணி ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல் மற்றும் கேதர் ஜாதவ் என மொத்தம் 11 வீரர்களை விடுவித்தது.


இதற்குப் பிறகு, அதிக பணம் வைத்திருக்கும் வரிசையில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.34 கோடி பணத்துடன் இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 32.7 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே ரூ.31.4 கோடி, ரூ.29.1 கோடி, ரூ.28.95 கோடி மற்றும் ரூ.15.25 கோடி பணத்தை ஏலத்திற்காக பதுக்கி வைத்துள்ளன. இது தவிர, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.14.5 கோடி பணத்துடனும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முறையே ரூ.13.9 கோடி மற்றும் ரூ.13.85 கோடி பணத்தை ஏலத்திற்காக வைத்துள்ளனர்.


யார் யார் பதிவுசெய்ய வாய்ப்புள்ளது..?


IPL 2024 ஏலத்திற்கு வீரர்கள் பதிவு செய்ய வியாழக்கிழமை (நவம்பர் 30) ​​இன்றே கடைசி நாள். வீரர்கள் தங்கள் பெயர்களை அந்தந்த கிரிக்கெட் வாரியங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழுடன் (NOC) சமர்ப்பிக்க வேண்டும். இம்முறை 700க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா போன்ற உலகக் கோப்பையின் குறிப்பிடத்தக்க வீரர்கள் டாப் டிராவில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐபிஎல் 2024 எப்போது..?


 பிப்ரவரி - மார்ச் மாதம் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்த பிறகு மார்ச் மூன்றாவது வாரம் முதல் மே மூன்றாவது வாரம் வரை ஐபிஎல் 2024 நடைபெற வாய்ப்புள்ளது.