இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.பி.எல். என்பது ஒவ்வொரு ஆண்டும் திருவிழா போன்று நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் அனைத்து ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இதுவரை ஒரே அணியில் நீடித்து வந்த வீரர்கள் அனைவரும் ஏலம் மூலமாக புதிய அணிகளுக்கு செல்ல உள்ளனர். இதற்கான ஏலம் நாளை நடைபெற உள்ளது.


இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் சில குறிப்பிட்ட வீரர்களை மட்டும் தங்கள் வசம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் உள்ள பேட்ஸ்மேன்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.



  • பாப் டுப்ளிசிஸ் :


கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற முக்கிய காரணமாக இருந்தவர். ரிட்டென்சன் மூலம் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். அவரை தக்கவைக்கவில்லை.




இருப்பினும், இந்த ஏலத்தில் அவரை மீண்டும் அணியில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டி வருகிறது. அதேசமயத்தில், பாப் டுப்ளிசிசை மும்பை அணி, பெங்களூர் அணி, ஹைதரபாத் அணி புதியதாக களமிறங்கியுள்ள லக்னோ, குஜராத் அணிகளும் வாங்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம். இவரது ஆரம்ப விலை 2 கோடி ஆகும். அவர் 10 கோடி வரை ஏலத்திற்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • டேவிட் வார்னர் :


ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். ஐதராபாத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர். ஆனால், கடந்த தொடரில் அவர் ஓரங்கட்டப்பட்டது ஐதராபாத் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஏலத்திற்கு வரும் டேவிட் வார்னரை எடுக்க அனைத்து அணிகளும் மும்முரம் காட்டும்.




டுப்ளிசிசை எடுக்க முடியாவிட்டால் சென்னை அணிக்கு தொடக்க வீரராக வார்னரை களமிறக்க அணி நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும், மும்பை, பெங்களூர், லக்னோ, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளும் ஆர்வம் காட்டும். டேவிட் வார்னரின் ஆரம்ப விலை ரூபாய் 2 கோடி ஆகும். ஆனால், அவர் 12.5 கோடி வரை விலை போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • குயின்டின் டி காக் :




மும்பை அணிக்காக ஆடி வந்த குயின்டின் டி காக் கடந்த சீசனில் சொதப்பலான பேட்டிங்கையே வெளிப்படுத்தினார். இதனால், இந்த முறை அவர் மும்பை ரிட்டென்சன் வபரர்கள் பட்டியலில் தக்கவைக்கப்படவில்லை. சிறந்த தொடக்க வீரரான குயின்டின் டி காக், அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டும். அவரது ஆரம்ப விலை 2 கோடி. அவர் இந்த ஏலத்தில் 10 கோடி வரை ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • மிட்செல் மார்ஷ்:




ஆஸ்திரேலியாவின் மிகவும் முக்கிய வீரர் மிட்ஷெல் மார்ஷ். ஹைதராபாத் அணிக்காக முக்கிய வீரராக வலம் வந்த இவர் சிறந்த பந்துவீச்சாளராகவும் உள்ளார். இருப்பினும் மிகவும் ஆபத்தான ஆபத்தான வீரரான இவர், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். இவரது ஆரம்பவிலை 2 கோடி ஆகும். இவர் 13 கோடி வரை ஏலத்திற்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • ஜேசன் ராய் :




இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான ஜேசன் ராய், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக ஆடியவர். சில ஓவர்கள் களத்தில் நின்றாலே ரன்களை ஜெட் வேகத்தில் உயர்த்தும் ஆற்றல் கொண்டவர் என்பதால் இவரை ஏலத்தில் எடுக்கவும் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டும். இவரது ஆரம்ப விலை 2 கோடி ஆகும். இவரும் 5 கோடிக்கு மேல் ஏலத்தில் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • ஓடீன் ஸ்மித் :




25 வயதே ஆன ஓடீன் ஸ்மித் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சமீபத்தில் அறிமுகமாகியவர். இவர் பெரியளவில் சர்வதேச போட்டிகளில் ஆடாவிட்டாலும், ஆல்ரவுண்டர் என்பதால் இவர் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று கருதப்படுகிறது. இவரது ஆரம்பவிலை ரூபாய் 1 கோடி ஆகும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண