ஐபிஎல்(IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய அணி வீரர்களையும் சமீபத்தில் தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்தநிலையில், ஏலம் தொடங்குவதற்கு முன்பாக கடைசி நிமிடத்தில் ஒரு சில வதந்திகள் பரவி வருகின்றனர். அவை என்ன என்பதை கீழே காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
நடப்பு ஆண்டில் சென்னைக்கு அணிக்கு மிக சிறந்த ஒரு சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், கடந்த 2018 ம் ஆண்டு போல ஆர் அஸ்வினை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர அதிக முயற்சி மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
மும்பை இந்தியன்ஸ் :
மும்பை இந்தியன்ஸ் அணியின் முகாமில் இருந்து இதுவரை எந்தவொரு செய்தியும் வரவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனை மீண்டும் ஏலம் எடுப்பார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஜேசன் ஹோல்டர், அம்பதி ராயுடு மற்றும் ரியான் பராக் ஆகியோரை தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹோல்டருக்கு ரூ.12 கோடியும், ராயுடுவுக்கு ரூ.8 கோடியும், பராக்கிற்கு ரூ.7 கோடியும் என நிர்ணயம் செய்துள்ளதாக தெரிகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஏலத்திற்கு முன்பே கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமத் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தக்கவைத்துக் கொண்டது. எனவே, முற்றிலும் புதிய அணியை கொண்டுவரும் நோக்கில் இந்த ஏலத்தில் களமிறங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியின் பார்வை தற்போது u-19 உலககோப்பை வெற்றி கேப்டன் யஷ் துல் பக்கம் திரும்பியுள்ளது. ஏனெனில் அவர் டெல்லி கேபிடல்ஸின் பால் பவன் அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், யஷ் துல் டெல்லி அணியில் தான் விளையாட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு பிறகு கடந்த ஒரு சில சீசன்களாக தடுமாறி வருகிறது. எனவே, ஷ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர் அல்லது இயான் மோர்கன் போன்ற முன்னாள் ஐபிஎல் கேப்டன்களையும் அணியில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்:
கேகேஆரைப் போலவே, பஞ்சாப் கிங்ஸுக்கும் ஒரு கேப்டன் தேவைப்படுகிறது.எனவே, வரும் மெகா ஏலத்தில் முன்னாள் ஐபிஎல் கேப்டன்களை அந்த அணி குறிவைக்கலாம் என்று தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரும்பாலும் இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கடந்த ஒரு சில சீசன்களில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதே வரிசையில் இந்த ஆண்டும் இளம் இந்திய வீரர்களை அந்த அணி குறிவைக்க அதிக வாய்ப்புண்டு.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ்: இரண்டு புதிய அணிகளுக்கும் மெகா ஏலத்தில் இளம் வீரர்களை குறிவைக்க கொக்குபோல் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்