இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்களை கீழே காணலாம்.



  • இஷான் கிஷான்


மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷானை ரூபாய் 15.25 கோடி அளித்து மும்பை அணியே ஏலத்தில் தக்கவைத்துள்ளது. இவர் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்யக்கூடியவர்



  • தீபக் சாஹர்:


ஆல்ரவுண்டரான தீபக் சாஹரை சென்னை அணி ரூபாய் 14 கோடி கொடுத்து ஏலத்தில் தக்கவைத்துள்ளது.



  • ஸ்ரேயாஸ் அய்யர் :


இந்திய அணியின் இளம் வீரரும், டெல்லி அணியின் முன்னாள் கேப்டனுமாகிய ஸ்ரேயாஸ் அய்யர் ரூபாய் 12.25 கோடி அளித்து கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.



  • லியாம் லிவிங்ஸ்டன் :


இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டனை ரூபாய் 11.50 கோடி அளித்து பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியுள்ளது. இவர் ஆல்ரவுண்டர் ஆவார்.



  • ஷர்துல் தாக்கூர் :


சென்னை அணிக்காக ஆடி வந்த ஷர்துல் தாக்கூரை ரூபாய் 10.75 கோடி அளித்து டெல்லி கேபிடல்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.



  • ஹசரங்கா :


இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான ஹசரங்காவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூபாய் 10.75 கோடி அளித்து ஏலத்தில் எடுத்துள்ளது.



  • ஹர்ஷல் படேல் :


கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய இளம் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூபாய் 10.75 கோடி அளித்து தக்கவைத்துள்ளது. கடந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • நிகோலஸ் பூரண்:


விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த நிகோலஸ் பூரணை ரூபாய் 10.75 கோடி அளித்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஏலம் எடுத்துள்ளது.



  • லாக்கி பெர்குசன் :


கடந்த தொடரில் கொல்கத்தாவிற்காக ஆடிய லாக்கி பெர்குசனை ரூபாய் 10 கோடி அளித்து குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது.



  • ஆவேஷ் கான் :


கடந்த தொடரில் மிகவும் சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் இளம் வீரர் ஆவேஷ் கானை ரூபாய் 10 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.