ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.


இந்நிலையில், விக்கெட் கீப்பர் பேட்டர்களுக்கான ஏலம் விடப்பட்டதில், இஷான் கிஷனை 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியனஸ் அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் ஏலம் வரலாற்றில், யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையை பெருகிறார் இஷான் ஷர்மா. இந்த சீசனைப் பொருத்தவரை, ஸ்ரேயாஸ் ஐயரை (12.25 கோடி ரூபாய்) பின்னுக்குத் தள்ளி அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.


இளம் வீரரான இஷான் கிஷன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சில மேட்ச் வின்னிங் பர்ஃபாமென்ஸ்களை விளையாடி இருக்கும் அவர், தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார்.




















மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண