ஐபிஎல் தொடர் 2022 ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட வாங்கப்படாத 5 வீரர்கள் பட்டியலை கீழே காணலாம்.


சுரேஷ் ரெய்னா : 


மிஸ்டர் ஐபிஎல் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. இந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட பங்கேற்ற 10 அணிகளில் ஒரு அணி வாங்க முன்வாரதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2008 ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் 421 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் இரண்டாவது சீசனில் 434 ரன்கள் அடித்தார். 2014ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை சுரேஷ் ரெய்னா அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஸ்டீவ் ஸ்மித் : 


கடந்த 2010 இந்தியன் பிரீமியர் லீக்கில் ஜெஸ்ஸி ரைடருக்கு மாற்றாக ஸ்மித்தை முதன்முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வாங்கியது. 2011 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது, அவரை கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி ஏலம் எடுத்தது. அதன்பிறகு, ராஜஸ்தான், புனே, டெல்லி அணியில் இடம்பெற்ற ஸ்மித், 2022 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. 


ஷகிப் அல் ஹசன் : 


ஷகிப் அல் ஹசன் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். தற்போது, அவர் வங்களாதேச அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கில், அவருக்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் இடது கை பேட்ஸ்மேன் ஷகிப் 71 போட்டிகளில் விளையாடி 793 ரன்கள் குவித்து, 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த 2022 தொடரில் இவரை கைப்பற்ற எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இஷாந்த் ஷர்மா : 


ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இஷாந்த் ஷர்மாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. கடந்த 2022 சீசனில் டெல்லி அணியில் இடம்பெற்ற இஷாந்த் ஷர்மா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி காயம் காரணமாக விலகினார். 


இம்ரான் தாகிர் :


பாகிஸ்தானில் பிறந்த இம்ரான் தாகிர் தென் ஆப்ரிக்கா அணிக்காக சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். இவர் கடந்த ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியில் இஅடம் பெற்றிந்த நிலையில், இந்த ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. கடந்த 2019 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்களை கைப்பற்றிய சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண