ஐபிஎல் 2022(IPL 2022) தொடரில் 10 அணிகள் இன்று பங்கேற்க உள்ளன. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளுடன் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக இந்தத் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் இன்று மற்றும் 13ஆம் தேதி (நாளை) பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணியின் உரிமையாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 


இந்நிலையில், ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அந்த அணியின் கேப்டன் தோனி குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 


அதில், எப்பொழுதும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தலைவன் என்ன டிசைடு பண்றாரோ அதுதான் முடிவாக இருக்கும். அவர் எப்படின்னா, அந்தந்த இடத்தில் ஆட வேண்டும் என்றால் அந்த இடத்திற்கு இவர்கள் பொறுத்தமாக இருப்பார்கள் என்று சொல்லுவார். அதன்படி, எங்களுக்கு ஏலத்தில் சிறந்த நாளாக அமைந்தால் தோனி கூறிய வீரர்களை ஏலத்தில் எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். 






சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(Chennai Super Kings) வரும் ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க காத்திருப்பதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட அந்த பதிவில், விளக்குகள். புகைப்பட கருவி. ஏலம்.! புதிய பயணத்திற்கான களம்! விடியல் எமோஷன் என்ன #சூப்பர் ஃபேன்ஸ்.? என்று தெரிவித்துள்ளனர். 






ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக சென்னை அணி நிர்வாகம் சார்பில் சென்னையில் ஒரு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் ஏற்கெனவே நீண்ட நாட்கள் சென்னை அணியில் விளையாடிய வீரர்கள் சிலரை மீண்டும் எடுக்க அந்த அணி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அணி இத்தனை நாட்கள் இந்த வீரர்களுடன் சிறப்பாக செயல்பட்டதால் அவர்களை மீண்டும் எடுக்க அணி நிர்வாகம் ஏலத்தில் முக்கியத்துவம் அளிக்க உள்ளது. அந்தவகையில் மீண்டும் டூபிளசிஸ், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய மூன்று பேரையும் இவர் குறிவைக்க உள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. 


முன்னதாக, சிஎஸ்கே ஏற்கெனவே தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய மூன்று வீரர்களை தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண