Jadeja Samson CSK RR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தாலும், சஞ்சு சாம்சனிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Continues below advertisement

சென்னை - ராஜஸ்தான் டீல் ஓவர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு மாற்றாக சஞ்சு சாம்சனை வழங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும், எந்தநேரத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியில் உள்ள மிகப்பெரிய ப்ராண்ட்களில் ஒன்றான சென்னை அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் ஜடேஜா, அதிலிருந்து வெளியேற சம்மதம் தெரிவித்தது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் ஜடேஜாவிற்கு ராஜஸ்தான் கூடுதல் சலுகை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஜடேஜாவிற்கு ராஜஸ்தானின் கிஃப்ட்:

வெளியாகியுள்ள தகவலின்படி, வீரர்களின் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் நிர்வாகத்திடம் ஜடேஜா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 37 வயதான நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஐபிஎல் போட்டியில் தனது கடைசி காலகட்டத்தை கூடுதல் பொறுப்புகளுடன் கழிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம்.  ஏற்கனவே சஞ்சு சாம்சன் இல்லாத சூழலில் ரியான் பராக் ராஜஸ்தான் அணியை வழிநடத்தி வந்துள்ளார். ஆனால், அவரை நிரந்தர கேப்டனாக்கில் மூத்த வீரர்களுக்கு இடையே மனஸ்தாபம், அணியில் பிளவு ஏற்படக்கூடும் என நிர்வாகம் கருதுகிறதாம். அதோடு, பராக்கின் போதிய அனுபவின்மையும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், புதிய முகம் மற்றும் அனுபவம் வாய்ந்த ஜடேஜாவை கேப்டனாக்கினால், அணியின் நிலைத்தன்மையை பராமரிக்க முடியும் எனவும் ராஜாஸ்தான் ஆலோசித்து வருகிறதாம். சென்னை அணியில் 2022ம் ஆண்டு கேப்டன்சி பதவி வழங்கப்பட்ட போது, ஜடேஜாவால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. இதனால், அவரிடம் இருந்து பதவி பாதியிலேயே பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

”வாழ்க்கை ஒரு வட்டம்”

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனது பயணத்தை தொடங்கி முதல் இரண்டு சீசன்களில் அந்த அணிக்காக விளையாடிய ஜடேஜாவுக்கு இது ஒரு முழுமையான தருணமாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றதற்காக 2010 இல் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார், இறுதியில் 2012 இல் சிஎஸ்கேவில் இடம்பெற்றார். அந்த அணியின் முக்கிய தூணாகவும் மாறினார். சென்னை அணிக்காக இந்தியன் ப்ரீமியர் லீகில் 186 போட்டிகளில் 143 விக்கெட்டுகளையும் 2198 ரன்களையும் எடுத்து 2018, 2021 மற்றும் 2023 பட்டங்களை வென்றுள்ளார். இளம் நட்சத்திரங்களைச் சுற்றி கட்டமைக்கப்படும் ஒரு RR அணிக்கு அவர் மிகவும் தேவையான அனுபவத்தைச் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சு சாம்சனுக்கு ”நோ”

மறுபுறம் சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆனாலும், குறைந்தபட்சம் இந்த சீசனில் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லையாம். தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்து திட்டவட்டமாக தெரியாத நிலையில், அவரது கீப்பர் பதவிக்கான வாரிசாக சாம்சன் இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், உடனடியாக ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அதனை சாம்சனிடம் வழங்கும் சூழல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லையாம்.