ஐபிஎல் மெகா சீசன்:
ஐபிஎல் சீசன் 18க்கான மெகா சீசன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த மெகா சீசனுக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் வேறு அணிக்கு மாறலாம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கேவில் இணைகிறாரா ரிஷப் பண்ட்?
இச்சூழலில் இது தொடர்பாக டெல்லி அணியின் ஆலோசகராக இருக்கும் கங்குலி பேசியிருக்கிறார். அதில், "ரிஷப் பண்ட் எங்கள் அணியில் தொடர்வார். அவர் வேறு அணிக்கு செல்வார் என்று கூறுவதில் உண்மையில்லை. பயிற்சியாளர் விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் இன்னும் ரிக்கி பாண்டிங்கிடம் பேசவில்லை. டெல்லி அணி நிர்வாகிகள் இந்திய பயிற்சியாளர்களை பணியமர்த்த யோசித்து வருகிறார்கள். தற்போது வரை அந்தப் பணியில் நான் அமர்வது குறித்து யோசிக்கவில்லை.
இந்திய பயிற்சியாளராக இருந்தால் போட்டிகள் இல்லாத நேரத்தில் கூட வீரர்களை அழைத்து அவர்களை தயார் படுத்த முடியும். இளம் வீரர்களின் குறையை நிவர்த்தி செய்ய முடியும். இதற்காகத்தான் இந்திய பயிற்சியாளர்களை டெல்லி நிர்வாகம் தேடுகிறது. இந்தியாவில் அதிக நேரம் தங்க வெளிநாட்டு பயிற்சியாளர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும்" என்று கங்குலி கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: Paris Olympics 2024: நாடு திரும்பிய தங்கமகன் அர்ஷத் நதீம்..பாகிஸ்தான் அரசு அறிவித்த உயரிய விருது!
மேலும் படிக்க: Sanju Samson: ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? சஞ்சு சாம்சன் ஓபன் டாக்