ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 18ன் மெகா ஏலாம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனில் புதிய விதிகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில் நிர்வாக குழு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 


புதிய விதிகள் என்ன?


இந்த முறை ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதாவது ஏலத்திற்கு முன்னதாக வீரர்களை நேரடியாக தக்க வைத்த கொள்ளலாம் இல்லை என்றால் ஏலம் நடைபெறும் போது ரைட் டூ மேட் என்ற அட்டையை பயன்படுத்தி வீரர்களை ஐபிஎல் அணிகள் வாங்கியும் கொள்ளலாம். ஒரு அணி ஆறு வீரர்களில் எத்தனை வீரர்களை தக்க வைப்பது, எத்தனை வீரர்களை ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி வாங்குவது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்ளலாம்.


தக்க வைக்கப்படும் அல்லது ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி வாங்கப்படும் ஆறு வீரர்களில் அதிகபட்சமாக ஐந்து சர்வதேச வீரர்கள் இடம் பெறலாம். மேலும், அதிகபட்சமாக இரண்டு உள்ளூர் வீரர்கள் இடம் பெறலாம். தக்க வைக்கப்படும் ஐந்து சர்வதேச வீரர்களில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு எத்தனை பேர் இடம் பெற வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு அணி விரும்பினால் ஐந்து வெளிநாட்டு வீரர்களை கூட தக்க வைத்து கொள்ளலாம்.


2025 ஐபிஎல் தொடருக்கான கூடுதல் சிறப்பம்சமாக புதிய சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில், ரூபாய் 7.5 லட்சம் சம்பளமாக அளிக்கப்படும். இதற்காக, அனைத்து ஐபிஎல் உரிமையாளர்களும் தங்கள் ப மதிப்பில் 12.60 கோடி ரூபாய் செலவிடலாம். ஒவ்வொரு அணிக்கான மொத்த மதிப்பும் கடந்த சீசனில் இருந்து 110 கோடியிலிருந்து 146 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, இதில் ஏலம் மற்றும் வீரகளின் சிறப்பு செயல்பாட்டு தொகை மற்றும் ஊதியம் ஆகியவை அடங்கும்.


இந்தத் தொகை 2026 சீசனில் 151 கோடி ரூபாயாகவும், 2027 சீசனில் 157 கோடி ரூபாயாகவும் உயரும். ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு சீசன் தொடங்குவதற்கு முன்பு வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யாவிட்டால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.