IPL 2025 : இன்னும் ஆரம்பிக்கவே இல்ல! ஐபிஎல்-ல் இருந்து விலகும் பும்ரா, ராகுல்? காரணம் என்ன..
IPL 2025: பல முன்னணி வீரர்கள் காயம் அல்லது தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் 2025 இன் ஆரம்ப போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் முக்கிய வீரர்கள் சிலர் பங்கேறகமாட்டார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 மார்ச் 22 அன்று தொடங்க உள்ளது, இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் மோதவுள்ளது. இந்த நிலையில், பல முன்னணி வீரர்கள் காயம் அல்லது தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் 2025 இன் ஆரம்ப போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் யார் என்பதை இதில் காணலாம்.
ஜஸ்பிரீத் பும்ரா:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது ஏற்பட்ட கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் மீண்டு வருவதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஸ்டார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களில் விளையாட வாய்ப்பில்லை.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட பும்ரா, ஜனவரி 5, 2025 முதல் விளையாடவில்லை. இந்த காயம் காரணமாக அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேறக முடியவில்லை
பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் (CoE) காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா, இன்னும் முழுமையாக பந்துவீசத் தொடங்கவில்லை என்று ஏப்ரல் மாதத்தில் மட்டுமே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
கே.எல் ராகுல்:
இந்திய அணி வீரரான கே.எல். ராகுல், ஐபிஎல் 2025-ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஒப்பந்தமானர். ஆனால் அவர் அந்த அணிக்காக முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார். ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி ஏப்ரல் மாதத்தில் தங்கள் முதல் குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பதால் ராகுல் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா:
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியை தவறவிடுவார்.
கடந்தாண்டு ஐபிஎல- இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மும்பை அணியின் குரூப் போட்டிக்குப் பிறகு மெதுவான ஓவர் வீசயதன் காரணமாக ஹார்திக் ஒரு போட்டியில் விளையாட விளையாட தடை விதிக்கப்பட்டது செய்யப்பட்டார். ஆனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டி தான் சென்ற மும்பை அணியின் கடைசி லீக் போட்டியாக இருந்தது. பாண்ட்யாவின் இடைநீக்கம் ஐபிஎல் 2025 சீசனின் அணியின் தொடக்க ஆட்டத்தின் போது மட்டுமே அமலுக்கு வரும். இதன் காரணமாக , ஹார்திக் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் 2025 இன் முதல் போட்டியில் விளையாட முடியாது.
மயங்க் யாதவ்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இடுப்பு பகுதியில் ஏற்ப்பட்ட காயத்திலிருந்து மயங்க் யாதவ் மீண்டு வருகிறார்,பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-இன் சிறப்பு மையத்தில் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவரது திரும்புவதற்கு பிசிசிஐ இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இதனால் அவர் ஐபிஎல் தொடரின் பிறபகுதியில் களமிறங்க வாய்ப்புள்ளது.
மிட்சேல் மார்ஷ்:
மெகா ஏலத்தில் எல்எஸ்ஜியால் ரூ.3.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய டி20ஐ கேப்டன் மிட்செல் மார்ஷ் ,முதுகுவலி காரணமாக ஜனவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இருந்து மார்ஷ் நீக்கப்பட்டார், மேலும் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், ஐபிஎல் 2025 இன் தொடக்க ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.