பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்து வரும் போட்டியில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, விராட் கோலி - ஜேக்கப் பெத்தேல் ஆட்டத்தை தொடங்கினர்.
கோலி- பெத்தேல் அபாரம்:
இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர். குறிப்பாக, விராட் கோலி மிகவும் அதிரடியாக ஆடினார். அவர் சிக்ஸராக விளாசி, ஜேக்கப் பெத்தேல் பவுண்டரியாக விளாசினார். இந்த ஜோடியின் அபாரமான பேட்டிங்கால் ரன்ரேட் 10க்கும் மேலே சென்றது. பவர்ப்ளேவில் இவர்கள் காட்டிய அதிரடியால் ரன்ரேட் சிறப்பாக அமைந்தது.
அபாரமாக ஆடிய ஜேக்கப் பெத்தேல் அரைசதம் விளாசினார். அவரை பதிரானா அவுட்டாக்கினார். அவர் 33 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய விராட் கோலி அரைசதம் விளாசினார். அபாரமாக ஆடிய விராட் கோலி சாம்கரண் பந்தில் அவுட்டானார். அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்து கலீல் அகமது பந்தில் அவுட்டானார்.
சரிந்த படிக்கல், படிதார்:
இதையடுத்து, படிக்கல் 17 ரன்களுக்கும், ஜிதேஷ் சர்மா 7 ரன்களுக்கும் அவுட்டானார்கள். இதனால், 17 ஓவர்களில் 154 ரன்கள் ஆர்சிபி எடுத்தது. அப்போது டிம் டேவிட் - கேப்டன் படிதார் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடி காட்டியது. இவர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக பதிரானா பந்துவீசினார். இதனால், கேப்டன் படிதார் 15 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஷெப்பர்ட் ருத்ரதாண்டவம்:
18வது ஓவரின் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆர்சிபி அணிக்காக களமிறங்கினார் ரோமாரியா ஷெப்பர்ட். ஷெப்பர்ட் ஆட்டத்தின் போக்கையே முழுவதுமாக மாற்றினார். அவர் கலீல் அகமது வீசிய 19வது ஓவரில் 4 சிக்ஸர் 2 பவுண்டரி விளாச மீண்டும் ஆர்சிபி ரன்ரேட் எகிறியது. அதேபோல, பதிரானா வீசிய கடைசி ஓவரிலும் அவர் சிக்ஸர் மழை பொழிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 213 ரன்களை எட்டியது.
டிம் டேவிட் - ஷெப்பர்ட் பார்ட்னர்ஷிப் 15 பந்துகளில் 50 ரன்களை எடுத்தது. ரோமாரியோ ஷெப்பர்ட் அவுட்டாகாமல் 14 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 2 ரன்னுடன் களத்தில் இருந்தார். சென்னை அணிக்காக பதிரானா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நூர் அகமது, சாம் கரண் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கலீல் அகமது 3 ஓவர்கள் மட்டுமே வீசி 65 ரன்களை விட்டுக்கொடுத்தார்.