IPL 2025 CSK vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. மழை எச்சரிக்கையால் இந்த போட்டி நடக்குமா? என்ற நிலையில் திட்டமிட்டபடி இந்த போட்டிக்கு டாஸ் போடப்பட்டது. 

இந்த போட்டியைப் பொறுத்தவரை ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

ப்ளேயிங் லெவன்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார். ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ஷெப்பர்ட், புவனேஷ்வர்குமார், நிகிடி, யஷ் தயாள் களமிறங்கியுள்ளனர். 

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் ஷைக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கரண், ஜடேஜா, ப்ரேவிஸ், தீபக் ஹுடா, எம்எஸ்தோனி, நூர் அகமது, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், பதிரானா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 

பேட்டிங் பலம்:

பெங்களூர் அணியில் பேட்டிங்கிற்கு கோலி, பெத்தேல், படிதார், படிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ஷெப்பர்ட் உள்ளனர். இவர்களில் கோலி நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமாகும். இளம் வீரர் பெத்தேல் அதிரடி காட்டினால் ஆர்சிபி வானவேடிக்கை காட்டும். கேப்டன் படிதார் தன்னுடைய அதிரடியை காட்ட வேண்டியது அவசியம் ஆகும். படிக்கல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்த வேண்டும். 

சென்னை அணியில் ஷைக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கரண் பேட்டிங்கில் கலக்கினால் அவர்களுக்கு வெற்றி வசப்படும். ப்ரெவிஸ் பலமாக காணப்படுகிறார். அதேபோல, தாெடர்ந்து சொதப்பி வரும் தீபக் ஹுடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் தோனியின் அதிரடி அவர்களுக்கு முக்கியம் ஆகும். 

பந்துவீச்சும், ஆல்ரவுண்டர்களும்:

ஆல்ரவுண்டர்களான குருணல் பாண்ட்யா, ஷெப்பர்ட் பங்களிப்பும், ஜடேஜா, சாம் கரணின் பங்களிப்பும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை பெற்றது. பந்துவீச்சில் புவனேஷ்வர், லுங்கி நிகிடி, யஷ் தயாள், ஹேசில்வுட் சென்னை அணியையும், கலீல் அகமது, நூர் அகமது, கம்போஜ், பதிரானா ஆர்சிபி அணியையும் வீழ்த்த தயாராக உள்ளனர்.