விராட் கோலி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகையின் புகைப்படத்திற்கு லைக் செய்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியுள்ளது. அவ்னீத் கார் என்கிற 24 வயது நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தில் விராட் கோலி லைக் செய்திருந்ததைப் பார்த்த ரசிகர்கள் அதை வைத்து மீம்கள் வெளியிடத் தொடங்கினார்கள். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து விராட் கோலி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்

விராட் கோலி விளக்கம் 

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் " இது தவறுதலாக ஏற்பட்டது. இதற்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையற்ற அனுமானங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவ்னீர் கார் புகைப்படத்தில் விராட் கோலி லைக் செய்ததைத் தொடர்ந்து தேவையற்ற வதந்திகள் பரவத் தொடங்கின. இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்ததை வைத்து ரசிகர்கள் மீம்களை பகிரத் தொடங்கினார்கள். விராட் கோலி எந்த தவறான எண்ணத்திலும் அப்படி செய்திருக்க மாட்டார் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். விருஷ்கா என இவர்களை ரசிகர்கள் செல்லமாக அழைப்பது வழக்கம். இருவருக்கும் வாமிகா என்கிற பெண் குழந்தையும் ஏகே என்கிற ஆண் குழந்தையும் உள்ளன. சமீபத்தில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிறந்த நாளுக்கு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவைத் தொடர்ந்