ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகப் போகிறார் என்ற செய்தி கடந்த இரண்டு நாட்களாக நாம் காதுகளில் எட்டி வருகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 2022ல் அறிமுகமானது. இந்த அணி அறிமுகம் ஆனதும் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. கேப்டனான ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்று யாரும் நினைக்கவில்லை. களமிறங்கிய முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தூக்கி கெத்து காட்டியது. இந்தநிலையில், ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி செல்ல இருப்பதாக உள்ள நிலையில், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு யார் கேப்டனாக செயல்படுவார் என்று இங்கே பார்க்கலாம். 


ஹர்திக்கிற்கு பிறகு குஜராத் கேப்டன் யார்?


ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தாங்கள் அறிமுகமான முதல் சீசனை வென்றபோது அதிர்ஷடத்தால்தான் எல்லாம் நடந்தது என்று சில கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மீண்டும் ஹர்திக் ஐபிஎல் 2023 இல் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மக்களின் இந்த சந்தேகத்தையும் தீர்த்தார். இருப்பினும், ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் மிகவும் பரபரப்பான ஆட்டத்தில், தோனியின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக பட்டத்தை வென்றது.


இப்போது, ​​தொடர்ந்து முதல் இரண்டு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இவ்வளவு உயரத்திற்கு அழைத்துச் சென்ற ஒரே மற்றும் வெற்றிகரமான கேப்டனான ஹர்திக் பாண்டியா, குஜராத்தை விட்டு வெளியேறினால், இந்த அணியின் கேப்டன் யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஹர்திக்கிற்குப் பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பதவியை சுப்மன் கில்லுக்கு வழங்கலாம் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தெளிவாகக் கூறுகிறார்கள். குஜராத்தில் தற்போது சுப்மன் கில் தவிர வேறு எந்த இந்திய வீரர் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை.ஆனால் கில்லுக்கு கேப்டன் பதவியில் அனுபவம் இல்லை. அதனால் சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்படமா? இல்லையா? என்பது கேள்விக்குறிதான். 


வெளிநாட்டு வீரர்களுக்கு கேப்டன் பதவியா..? 


கேன் வில்லியம்சன்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த ஆண்டு குஜராத் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் காயம் அடைந்து முழு சீசனிலும் வெளியேறினார். பல ஆண்டுகளாக நியூசிலாந்துக்கு கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன், ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக இருந்த அனுபவம் அதிகம். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நிறைய போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். எனவே, குஜராத் அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டன் பதவிக்கு ஒரு சாய்ஸாக இருக்கலாம்.


ரஷித் கான்: குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். மேலும், குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் ரஷித் கான், பலமுறை பல போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ரஷித் கான் குஜராத்தின் துணைக் கேப்டனாகவும் உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அணி நிர்வாகத்திற்கு கேப்டன் பதவிக்கான முதல் தேர்வாக ரஷித் இருக்க முடியும்.


டேவிட் மில்லர்: தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கடந்த இரண்டு ஆண்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். அவர் குஜராத்தின் முக்கிய வீரர் மற்றும் அனுபவம் வாய்ந்தவர். மேலும் ஐபிஎல்லில் பலமுறை பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாகவும் இருந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் டேவிட் மில்லர் குஜராத் அணிக்கு சிறந்த கேப்டன்ஷிப்பாகவும் இருக்க முடியும்.