மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத் அணியை மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதையடுத்து, கடைசி இடத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 9வது இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளது. இதில், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் தலா 16 புள்ளிகளும், சென்னை மற்றும் ஹைதராபாத் தலா 12 புள்ளிகளும் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே தலா 8 புள்ளிகளுடன் முறையே 7,8,9 மற்றும் 10 இடங்களில் உள்ளது. இதையடுத்து, இதுவரை எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. இந்தநிலையில், இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.
ஐபிஎல் 2024லில் நேற்றைய மும்பை மற்றும் ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டிக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் எந்தெந்த அணி, எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் 2024: புள்ளிகள் பட்டியல் | |||||||
தரவரிசை | அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | புள்ளிகள் | ரன் ரேட் |
1 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 11 | 8 | 3 | 0 | 16 | 1.453 |
2 | ராஜஸ்தான் ராய்ல்ஸ் | 10 | 8 | 2 | 0 | 16 | 0.622 |
3 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 11 | 6 | 5 | 0 | 12 | 0.7 |
4 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 11 | 6 | 5 | 0 | 12 | -0.065 |
5 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 11 | 6 | 5 | 0 | 12 | -0.371 |
6 | டெல்லி கேப்பிடல்ஸ் | 11 | 5 | 6 | 0 | 10 | -0.442 |
7 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 11 | 4 | 7 | 0 | 8 | -0.049 |
8 | பஞ்சாப் கிங்ஸ் | 11 | 4 | 7 | 0 | 8 | -0.187 |
9 | மும்பை இந்தியன்ஸ் | 12 | 4 | 8 | 0 | 8 | -0.212 |
10 | குஜராத் டைட்டன்ஸ் | 11 | 4 | 7 | 0 | 8 | -1.32 |
ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்:
1. விராட் கோலி (RCB): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 542 ரன்கள், சராசரி: 67.75, ஸ்ட்ரைக் ரேட்: 148.08, 4s: 48, 6s: 24
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், Avg 541 : 60.11, ஸ்ட்ரைக் ரேட்: 147.01, 4s: 57, 6s: 16
3. சுனில் நரைன் (KKR): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 461 ரன்கள், சராசரி: 41.91, ஸ்ட்ரைக் ரேட்: 183.66, 4s: 46:
4. ட்ராவிஸ் ஹெட் (SRH): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 444 ரன்கள் சராசரி: 44.40, ஸ்ட்ரைக் ரேட்: 189.74, 4s: 53, 6s: 23
5. கே.எல். ராகுல் (LSG): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 431 ரன்கள், சராசரி: 39.18, ஸ்ட்ரைக் ரேட்: 141.31, 4s: 40, 6s: 15
பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்:
1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 12 போட்டிகள், 47.5 ஓவர்கள், 18 விக்கெட்கள், சராசரி: 16.50, ரன்கள்: 297, 5-ஃபெர்ஸ்: 1.
2. ஹர்ஷல் படேல் (PBKS): 11 போட்டிகள், 37.0 ஓவர்கள், 17 விக்கெட்டுகள், சராசரி: 21.29, ரன்கள்: 362, 4-ஃபெர்ஸ்: 0.
3. வருண் சக்ரவர்த்தி (KKR): 11 போட்டிகள், 40 ஓவர்கள், 16 விக்கெட்டுகள், சராசரி: 21.87, ரன்கள்: 350, 4-ஃபெர்ஸ்: 0.
4. டி நடராஜன் (SRH) : 9 போட்டிகள், 32.0 ஓவர்கள், 15 விக்கெட்டுகள், சராசரி: 19.13, ரன்கள்: 287, 4-ஃபெர்ஸ்: 1.
5. அர்ஷ்தீப் சிங் (PBKS): 11 போட்டிகள், 39.2 ஓவர்கள், 15 விக்கெட்கள், சராசரி: 26.40, ரன்கள்: 4 -ஃபெர்ஸ்: 1.