ஐபிஎல் 2024 இன் 59வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் , குஜராத் 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையை அப்படியே தக்கவைத்து கொண்டது குஜராத். மறுபுறம், சென்னையின் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறுமா இல்லையா என்பதில் தொங்கிக்கொண்டிருக்கிறது. 

இந்த வெற்றிக்குப் பிறகு, குஜராத் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திலும், சென்னை நான்காவது இடத்திலும் உள்ளன. குஜராத் 10 புள்ளிகளும், சென்னை 12 புள்ளிகளும் பெற்றுள்ளன. இரு அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடி அதில் சென்னை 6 வெற்றியும், குஜராத் 5 வெற்றியும் பெற்றுள்ளன. 

இவைதான் டாப்-4 அணிகள்:

புள்ளிப்பட்டியலில் முதல்-4 அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் முறையே  தலா 16 புள்ளிகளுடன் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், சென்னை 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. 

மற்ற அணிகளின் நிலையும் இதுதான் 

அதனை தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலா 12 புள்ளிகளுடன் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலா 10 புள்ளிகளுடன் முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன. பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன. 

அட்டவணை வடிவிலான புள்ளிப்பட்டியல்: 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

புள்ளிகள்

நிகர ரன் ரேட்

1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

11

8

3

16

+1.453

2

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

11

8

3

16

+0.476

3

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

12

7

5

14

+0.406

4

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

12

6

6

12

+0.491

5

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

12

6

6

12

-0.316

6

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

12

6

6

12

-0.769

7

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

12

5

7

10

+0.217

8

குஜராத் டைட்டன்ஸ் (GT)

12

5

7

10

-1.063

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

12

4

8

8

-0.212

10

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

12

4

8

8

-0.423

ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்: 

1. விராட் கோலி (RCB): 12 போட்டிகள், 634 ரன்கள், சராசரி: 70.44, ஸ்ட்ரைக் ரேட்: 153.51, 4s: 55, 6s: 30
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 12 போட்டிகள், 541 ரன்கள், சராசரி: 60.14, ஸ்ட்ரைக் ரேட்: 147.01, 4s: 57, 6s: 16
3. டிராவிஸ் ஹெட் (SRH): 11 போட்டிகள், 533 ரன்கள், சராசரி: 53.30, ஸ்ட்ரைக் ரேட்: 201.89, 4s: 61, 6s: 31
4. சாய் சுதர்ஷன் (GT):  127 ரன்கள், , சராசரி: 47.91, ஸ்ட்ரைக் ரேட்: 141.28, 4s: 48, 6s: 16
5. சஞ்சு சாம்சன் (RR): 11 போட்டிகள், 471 ரன்கள், சராசரி: 67.29, ஸ்ட்ரைக் ரேட்: 163.54, 4s: 44, 6s: 42.

பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்: 

1. ஹர்ஷல் படேல் (PBKS): 12 போட்டிகள், 41.0 ஓவர்கள், 246 பந்துகள், 20 விக்கெட்டுகள், சராசரி: 20.00, ரன்கள்: 400, 5-ஃபெர்ஸ்: - 0
2. ஜஸ்பிரித் பும்ரா (MI): 12 போட்டிகள், 47.5 ஓவர்கள், 4287 பந்துகள், , 18 விக்கெட்டுகள், சராசரி: 16.50, ரன்கள்: 297, 5-ஃபெர்ஸ்: 1
3. வருண் சக்ரவர்த்தி (KKR): 11 போட்டிகள், 40.0 ஓவர்கள், 240 பந்துகள், 16 விக்கெட்டுகள், சராசரி: 21.88, ரன்கள்: 350, 5-ஃபெர்ஸ்: 1
4. அர்ஷ்தீப் சிங் (PBKS): 12 போட்டிகள், 42.2 ஓவர்கள், 254 பந்துகள், 16 விக்கெட்டுகள், சராசரி: 27.31, ரன்கள்: 437, 5-ஃபெர்ஸ்: 1
5. டி நடராஜன் (SRH): 10 போட்டிகள், 39.2 பந்துகள், 236 , 15 விக்கெட்டுகள், சராசரி: 24.53, ரன்கள்: 368, 5-ஃபெர்ஸ்: - 0