IPL 2024 Points Table: இந்தியன் பிரீமியர் லீக்கின் நேற்றைய 62வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. இதுவரை மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டுமே தகுதிபெற்றுள்ளது. 

மீதமுள்ள 2 பிளே ஆஃப் இடங்களுக்கு 5 அணிகள் கடுமையாக போட்டியிடுகின்றன. இதையடுத்து, அனைத்து அணிகளின் பார்வையும் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிக்ஸ் அணிகளுக்கான இடையேயான போட்டியின் முடிவுக்காக காத்திருக்கின்றன.

இந்தநிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தில் உள்ளது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

முடிவு இல்லை

புள்ளிகள்

நிகர ரன்ரேட்

1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) (Q)

13

9

3

1

19

1.428

2

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) (Q)

12

8

4

0

16

0.349

3

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

13

7

6

0

14

0.528

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

12

7

5

0

14

0.406

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

14

7

7

0

14

-0.377

6

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

13

6

7

0

12

0.387

7

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

13

6

7

0

12

-0.787

8 (E)

குஜராத் டைட்டன்ஸ் (GT)

13

5

7

1

11

-1.063

9 (E)

மும்பை இந்தியன்ஸ் (MI)

13

4

9

0

8

-0.271

10 (E)

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

12

4

8

0

8

-0.423

அதிக ரன்கள் - ஆரஞ்சு கேப்: 

தரவரிசை வீரர்கள் அணிகள் இன்னிங்ஸ் ரன்கள் ஆவ்ரேஜ் ஸ்ட்ரைக் ரேட்
1 விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13 661 66.1 155.16
2 ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 583 58.3 141.5
3 ட்ராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 11 533 53.3 201.89
4 சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் 12 527 47.91 141.29
5 சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 486 60.75 158.31

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஐபிஎல் 2024ல் அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இவர் இதுவரை 13 இன்னிங்ஸ்களில் 661 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 583 ரன்களுடன் இருக்கிறார். தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 533 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். 

அதிக விக்கெட்கள் - பர்பிள் கேப்:

தரவரிசை வீரர்கள் அணிகள் இன்னிங்ஸ் விக்கெட்கள் எகானமி ஸ்ட்ரைக் ரேட்
1 ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் 13 20 6.48 15
2 ஹர்சல் படேல் பஞ்சாப் கிங்ஸ் 12 20 9.76 12
3 வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 18 8.34 14
4 முகேஷ் குமார் டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 17 10.37 12
5 கலீல் அகமது டெல்லி கேப்பிட்டல்ஸ் 14 17 9.58 17 

ஐபிஎல் 2024ல் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 13 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஹர்சல் பட்டேல் 20 விக்கெட்களுடன் எகானமி அடிப்படையில் இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றார். மேலே, குறிப்பிட்டுள்ள இரண்டு வீரர்களும் கிட்டத்தட்ட ஐபிஎல் 2024ல் இருந்து விலகிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவத்தில் அதிக விக்கெட்கள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.