காயம் காரணமாக ஐ.பி.எல் சீசனில் விளையாடாமல் இருந்து சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.


ரசிகர்களுக்கு ஏமாற்றம்:


ரோஹித் சர்மா தலைமையில் 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இந்த அணி தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த சீசனை விளையாடி வருகிறது. அந்தவகையில், இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ளது.


புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனிடையே ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இருந்தும் அந்த தோல்வி ஹாட்ரிக் தோல்வி அடைந்து இருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.


அதிலும், குறிப்பாக அந்த அணிக்காக கடந்த காலங்களில் விளையாடிய ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு உள்ளிட்டோர் வெளிப்படையாகவே மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். முக்கியமாக ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்ய குமார் யாதவ் உள்ளிட்டோருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இது உண்மையாக்கும் வகையில் சூர்யகுமார் யாதவின் சமூக வலைதள பதிவும் அமைந்தது.


அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவர் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷி பற்றி எதுவும் பேசவில்லை என்றும் மும்பை அணியில் ஒற்றுமை இல்லை என்பதை இது வெளிப்படையாக காட்டுகிறது என்று கூறப்பட்டது. இதனிடையே சூர்யகுமார் யாதவ் கடந்த மூன்று போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடாதது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


அணியில் இணைந்த சூர்யகுமார் யாதாவ்:


இந்நிலையில் தான் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்ய குமார் யாதவ் அணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை இந்ந்தியன்ஸ் அணி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின்போது சூர்யகுமார் யாத்வுக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. இதனிடையே அவருக்கு குடலிறக்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது


Jiska humein tha intezaar.. 🤩🤌

सूर्या दादा is here, Paltan! 💙#MumbaiMeriJaan #MumbaiIndians | @surya_14kumar pic.twitter.com/eL98y970Pe


இச்சூழலில் இதற்கான அறுவைசிகிச்சையை மேற்கொண்ட அவர் ஓய்வு எடுத்து வந்தார். பின்னர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதிக்கான சான்றிதழைப் பெற்றார். இந்நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாட உள்ளார். இதுவரை 139 போட்டிகள் விளையாடி உள்ள இவர் 1 சதம் உட்பட மொத்தம் 3,249 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.