இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 66வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
சூடுபிடிக்கும் ஐ.பி.எல்.:
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியை பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டி வெறும் சம்பிரதாயம் மட்டுமே. இதில், குஜராத் அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. குஜராத் அணி 11 புள்ளிகளுடன் பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி தற்போது புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
ஆனால், இந்த போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட பிளே ஆஃப்க்கு தகுதிபெறும். 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2ம் இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது இருப்பினும், முதல் இன்னிங்ஸில் புதிய பந்தில் வேகப் ந்துவீச்சாளர்கள் விக்கெட்களை எளிதாக வீழ்த்த வாய்ப்புண்டு. அதேசமயம், இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் காணப்படுவதால், பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீசுவது கொஞ்சம் கடினமாகும், அப்போது, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம். கடந்த போட்டிகளில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வாணவேடிக்கை காட்டினர்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே இதுவரை அதிக போட்டிகள் நடைபெறவில்லை. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஹைதராபாத் மற்றும் குஜராத் அணி 4 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் 3 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், மயங்க் அகர்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன்/கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்/ஜெய்தேவ் உனத்கட்
குஜராத் டைட்டன்ஸ் அணி:
சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), பி சாய் சுதர்சன், எம் ஷாருக் கான், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, ஜோஷ் லிட்டில்/அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஆர் சாய் கிஷோர்/சந்தீப் வாரியர்