IPL 2024 GILL: நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சுப்மன் கில் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். 


கோலியின் சாதனையை முறியடித்த கில்:


குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மான் கில் வெறும் 24 வயது மற்றும் 215 நாட்களில், ஐபிஎல் தொடரில் 300 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம்,  ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் 3000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமயை பெற்றுள்ளார். 94 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


ஐபிஎல்லில் இந்த சாதனையை எட்டிய நான்காவது அதிவேக பேட்ஸ்மேன் மற்றும் இந்த சாதனையை அதிவேகமாக எட்டிய இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையு பெற்றார். முன்னதாக பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன கோலி, இளம் வயதில் 3000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தன்னகத்தே அவர் வைத்து இருந்தார். அதன்படி, 26 ஆண்டுகள் மற்றும் 186 நாட்களில் கோலி  3000 ரன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.


இளம் வயதில் 3000+ ரன்களை கடந்த வீரர்கள்:


24 வருடம் 215 நாட்க்ள் - சுப்மான் கில்*
26 வயது 186 நாட்க்ள் - விராட் கோலி
26 வயது 320 நாட்க்ள் - சஞ்சு சாம்சன்
27 வயது 161 நாட்க்ள் - சுரேஷ் ரெய்னா
27 வயது 343 நாட்க்ள் - ரோகித் சர்மா


அதிவேகமாக 3000 ரன்கள் அடித்த வீரர்கள்:


ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 3000 ரன்களை எட்டிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை, தற்போதைய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவர் வெறும் 80 இன்னிங்ஸ்களிலேயே 3000 ரன்களை கடந்துவிட்டார். அவர தொடர்ந்து, ஜோஸ் பட்லர், சுப்மான் கில் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் இந்த சாதனையை எட்ட 94 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டனர். 


தடுமாறும் குஜராத் & கில்:


கொல்கத்தா அணி மூலம் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் அறிமுகமானாலும், கடந்த 2022ல் புதியதாக உருவாக்கப்பட்ட குஜராத் அணிக்கு வந்த பிறகு நட்சத்திர பேட்ஸ்மேன் ஆக உயர்ந்துள்ளார். அந்த அணிக்காக பல மேட்ச் - வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடி கொடுத்துள்ளார். அறிமுக அண்டிலேயே குஜராத் அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்காற்றினார்.


கடந்த ஆண்டும் அந்த அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல, கில்லின் பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், நடப்பாண்டில் கில்லின் பேட்டிங் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக அரை சதம் கடந்தாலும், மற்ற போட்டிகளில் சொதப்பியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா விலகலை தொடர்ந்து, நடப்பு சீசனில் குஜராத் அணியின் கேப்டனாகவும் கில் செயல்பட்டு வருகிறார். ஆனால், அந்த அணியும் தொடர் வெற்றிகளை பெற முடியாமல் தவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 3 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் குஜராத் 6வது இடத்தில் உள்ளது.