ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன் அணியின் கேப்டன் சும்பன் கில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். 


இந்தியன் பிரீமியர் லீக்கில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார். இந்த சாதனையை இவர், 24 வயது 215 நாட்களில் 3000 ரன்களை கடந்த இளம் வீரரானார். இதன்மூலம், விராட் கோலியின் சாதனையை கில் முறியடித்துள்ளார். மேலும், சுப்மன் கில் 94 இன்னிங்ஸ்களில் ஐபிஎல்லில் 3000 ரன்களை எட்டியும் புதிய சாதனை பட்டியலில் இணைந்தார். 


சுப்மன் கில்லுக்கு முன், மிகக் குறைந்த வயதில் 3000 ரன்கள் எடுத்த சாதனை விராட் கோலியின் பெயரில் இருந்தது. விராட் கோலி தனது 26 வயது 186 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.  இவர் 26 வயது 320 நாட்களில் ஐபிஎல்லில் 3000 ரன்களை கடந்தார்.


ஐபிஎல்லில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னா நான்காவது இடத்திலும், ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா தனது 27 வயது 161 நாட்களிலும், ரோகித் சர்மா தனது 27 வயது 343 நாட்களிலும் இந்த சாதனையை படைத்தனர். 


ஐபிஎல்லில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல்: 



  • கேஎல் ராகுல் - 80 இன்னிங்ஸ்

  • சுப்மன் கில் - 94 இன்னிங்ஸ்

  • சுரேஷ் ரெய்னா - 103 இன்னிங்ஸ்

  • அஜிங்க்யா ரஹானே - 104 இன்னிங்ஸ்

  • ரோஹித் சர்மா - 109 இன்னிங்ஸ்

  • ஷிகர் தவான் - 109 இன்னிங்ஸ்

  • விராட் கோலி - 110 இன்னிங்ஸ்

  • கவுதம் கம்பீர் - 110 இன்னிங்ஸ்


இளம் வயதில் 3000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியல்: 



  1. 24 ஆண்டுகள் 215 - சுப்மன் கில்

  2. 26 ஆண்டுகள் 186 நாட்கள் - விராட் கோலி

  3. 26 ஆண்டுகள் 320 நாட்கள் - சஞ்சு சாம்சன்

  4. 27 ஆண்டுகள் 161 நாட்கள் - சுரேஷ் ரெய்னா

  5. 27 ஆண்டுகள் 343 நாட்கள் - ரோஹித் சர்மா 


ஐபிஎல்லில் குறைந்த இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்த வீரர்கள்: 



  • கிறிஸ் கெய்ல் - 75 இன்னிங்ஸ்

  • கேஎல் ராகுல் - 80 இன்னிங்ஸ்

  • ஜோஸ் பட்லர் - 85 இன்னிங்ஸ்

  • சுப்மன் கில் - 94 இன்னிங்ஸ்

  • டேவிட் வார்னர் - 94 இன்னிங்ஸ்

  • ஃபாப் டு பிளெசிஸ் - 94 இன்னிங்ஸ்

  • சுரேஷ் ரெய்னா - 103 இன்னிங்ஸ்

  • ஏபி டி வில்லியர்ஸ் - 104 இன்னிங்ஸ்

  • அஜிங்க்யா ரஹானே - 104 இன்னிங்ஸ்


2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைவதற்கு முன்பு 2018ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தனது ஐபிஎல் அறிமுகமான சுப்மான் கில், ஐபிஎல்லில் 3000 ரன்களை கடக்க அவருக்கு 27 ரன்கள் தேவையாக இருந்தது. அதில்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி, தனது 94வது இன்னிங்சில் 3000 ரன்களை கடந்து டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்தார் சுப்மன் கில். 


ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல் கேகேஆர், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அடைய கெய்லுக்கு 75 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவைப்பட்டன. 80 இன்னிங்ஸ்களில் 3000 ஐபிஎல் ரன்களை கடந்த கேஎல் ராகுல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய பேட்ஸ்மேனாக, ராகுல் அதிவேகமாக 3000 ரன்களை கடந்தவர். இவர் 80 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டினார்.