ஐ.பி.எல் சீசன் 17:


ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.மைதானத்தில் நடைபெற்றது. அந்த வகையில் முதல் போட்டியிலேயே சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றது. தற்போது வரை 5 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சி.எஸ்.கே, ஆர்.ஆர், பஞ்சாப், குஜராத் மற்றும் கே.கே.ஆர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.


முன்னதாக ஐ.பி.எல் சீசன் 17-ன் முதற்கட்ட அட்டவணை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இதில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை முதற்கட்டமாக 21 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் இரண்டாம் கட்ட அட்டவணை  இன்று வெளியாகியுள்ளது. 


இறுதிப் போட்டி எங்கே?






 


அந்த வகையில் குவாலிஃபையர் 1 - குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. எலிமினேட்டர் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி மே 22ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், குவாலிஃபையர் 2 மே 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


முக்கியமாக ஐ.பி.எல் சீசன் 17-ன் இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.