ஐ.பி.எல் சீசன் 17:
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் 2024ன் 19 வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 6) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த சீசனில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் ஏமாற்றம் அளித்து வருகிறது.
இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி:
ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் மைதானத்தின் பிட்சானது பொதுவாக பேட்டிங்கிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும். இந்த சீசனில் இதுவரை இங்கு இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 193 ரன்களையும், இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி 185 ரன்களையும் எடுத்திருந்தது. எனவே, முதலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல் அணி இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சையே தேர்வு செய்துள்ளது. அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியான பேட்டிங்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்):
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன் ), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சவுரவ் சவுகான், ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன் , விக்கெட் கீப்பர்) ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்