IPL 2024 RR vs LSG LIVE Score: வீணாகப் போன பூரன் போராட்டம்; 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ராஜ்ஸ்தான்!
IPL 2024 RR vs LSG LIVE Score Updates: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்களை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜ்ஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜ்ஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் 18வது ஓவரில் ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை அஸ்வின் பந்தில் இழந்து வெளியேறினார்.
லக்னோ அணியின் பூரன் 30 பந்தில் 51 ரன்கள் சேர்த்து அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
35 பந்துகளை எதிர்கொண்டு லக்னொ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
போல்ட் வீசிய 13வது ஓவரில் பூரான் இரண்டு சிஸ்கர் ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 122 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 102 ரன்கள் சேர்த்துள்ளது.
லக்னோ அணி 11.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பர்ஹர் போட்டியின் 11வது ஓவரில் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரி விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் 92 ரன்கள் சேர்த்துள்ளது.
லக்னோ அணி வெற்றி பெற 10 ஓவர்களில் 118 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிக்கொண்டு உள்ளது.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் கே.எல். ராகுல் மற்றும் பூரான் உள்ளனர்.
தீபக் ஹூடா 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை சஹால் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் சேர்த்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் முதல் ஓவரில் போல்ட் இதுவரை 23 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
லக்னோ அணியின் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், பர்கர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
லக்னோ அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டு உள்ளது.
இரண்டு ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 10 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி களத்தில் கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தட் படிக்கல் களத்தில் நிற்கின்றனர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி) 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது லக்னோ அணி. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உள்ள சஞ்சு சாம்சன் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தனது முதல் போட்டியில் அரைசதம் விளாசி வருகின்றார். இதுவரை ஐபிஎல் தொடரில் 21 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிராக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 3 பவுண்டரி 8 சிக்ஸர் விளாசி 82 ரன்கள் விளாசியுள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் ராஜ்ஸதான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து விளையாடிவருகின்றது.
அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர் தனது விக்கெட்டினை 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் தனது விக்கெட்டினை ரவி பிஷ்னாய் வீசிய 17வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
16.1 ஓவரில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்து விளையாடு வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சஞ்சு சாம்சன் மற்றும் இயான் பராக் கூட்டணி 59 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்த நிலையில் போட்டியின் 15வது ஓவரில் பிரிந்தது.
29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து இயான் பராக் தனது விக்கெட்டினை நவீன் பந்தில் இழந்து வெளியேறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் 14.5 ஓவர்களில் 142 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சாம்சன் மற்றும் பராக் கூட்டணி 48 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
சஞ்சு சாம்சன் தனது 21வது ஐபிஎல் அரைசதத்தினை ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் விளாசியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சஞ்சு சாம்சன் மற்றும் பராக் கூட்டணி 39 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் ராஜ்ஸதான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணி 10.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணி 10.2 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 95 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 9வது ஓவரில் சாம்சன் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு அசத்தினார். 9 ஓவர்கள் முடிவில் ராஜ்ஸதான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்துள்ளது. 5வது ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வால் 12 பந்தில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
சஞ்சு சாம்சன் தனது முதல் பவுண்டரியை போட்டியின் 5வது ஓவரின் முதல் பந்தில் விளாசியுள்ளார்.
4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 32 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 24 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்கியுள்ளார்.
போட்டியின் இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய பட்லர், அதே ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
போட்டியின் இரண்டாவது ஓவரின் 2வது பந்தில் இந்த போட்டியின் முதல் பவுண்டரியை பட்லர் நவீன் உல்-ஹக் பந்தில் விளாசினார்.
முதல் ஓவர் முடிவில் ராஜ்ஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் தொடங்கியுள்ளனர்.
லக்னோவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
Background
RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் இண்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கே. எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
ராஜஸ்தான் - லக்னோ மோதல்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இரண்டு அணிகளும் நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டுவதால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
கடந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், கடைசி 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதேநேரம், 2022ம் ஆண்டு அறிமுகமான லக்னோ அணியோ, இரண்டு முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி பட்லர், ஜெய்ஷ்வால், சாம்சன், பவல் மற்றும் ஜுரெல் என வலுவான பேட்டிங்கை கொண்டிருக்க, பந்துவீச்சில் சாஹல் மற்றும் அஷ்வின் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வேகப்பந்துவீச்சு சற்று பலவீனமாகவே தெரிகிறது. அதோடு ஒரு அணியாக சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ராஜஸ்தானால் வெற்றியை ஈட்ட முடியும். மறுமுனையில் லக்னோ அணியில் மேயர்ஸ், படோனி, பூரான், ராகுல் மற்றும் ஸ்டோய்னிஷ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்துள்ளனர். ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி இரண்டு முறையும், லக்னோ அணியும் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 178 ரன்களையும், குறைந்தபட்சமாக 144 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 162 ரன்களையும், குறைந்தபட்சமாக 154 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
ஜெய்ப்பூர் மைதானம் எப்படி?
சவாய் மான்சிங் மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றன, சேசிங் அணிகள் இரண்டு முறை வெற்றி பெற்றன.
உத்தேச அணி விவரங்கள்:
ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் , ரோவ்மன் பவல், துருவ் ஜூரல், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நந்த்ரே பர்கர், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்
லக்னோ: கைல் மேயர்ஸ், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -