ஐ.பி.எல் 2024:


கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.


 


இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியானது, அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பண்டை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளதுமுன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூட ரிஷப் பண்ட் விளையாடுவதை உறுதிபடுத்தினார்.


அதேபோல் இந்த முறை எப்படியும் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட வேண்டும் என்று பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். அதேபோல் தான் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டார்.


கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்:


இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற தகவல் தான் அது.





அதேபோல் பேட்டிங்கில் மட்டுமே ரிசப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதேநேரம் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இன்னும் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் அட்டவணை வெளியன பின்னரே ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகும்.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் அதிக ரன்களை குவித்த முதல் வீரர்.. ரன் மிஷின் விராட் கோலியின் சாதனை!


 


மேலும் படிக்க:Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!