IPL 2024 Records: முடிந்த ஐபிஎல் லீக் போட்டிகள் - பல்வேறு சாதனைகள்.. ரன்கள்.. விக்கெட்டுகளில் அசத்தியது யார்?

IPL 2024 Records: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிந்த நிலையில், இதுவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய வீரர்கள் மற்றும் அணிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

IPL 2024 Records: ஐபிஎல் 2024 தொடரின் லீக் சுற்று முடிந்த நிலையில், இதுவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய வீரர்கள் மற்றும் அணிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

Continues below advertisement

ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகள்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிரடியான பேட்டிங், அட்டகாசமான பவுலிங், பிரமாண்டமான சேஸிங் மற்றும் கடைசி பந்துவரை முடிவை கணிக்க முடியாத சூழல் என, பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் லீக் சுற்று நடந்து முடிந்துள்ளது.

70 லீக் போட்டிகளின் முடிவில் 4 அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் லீக் சுற்றில் இதுவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிகள் மற்றும் வீரர்கள் படைத்த முக்கிய சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அதிக ரன் சேர்த்த வீரர்கள் - டாப் 5:

1. விராட் கோலி - 708 ரன்கள்

2. ருதுராஜ் கெய்க்வாட் - 583 ரன்கள்

3. டிராவிஸ் ஹெட் - 533 ரன்கள்

4. ரியான் பிராக் - 531 ரன்கள்

5. சாய் சுதர்ஷன் - 527 ரன்கள்

பேட்டிங்கில் மற்ற சாதனை விவரங்கள்:

  • அதிக பவுண்டரி அடித்த வீரர் - டிராவிஸ் ஹெட் - 61 பவுண்டரிகள்
  • அதிக சிக்சர்களை விளாசிய வீரர் - அபிஷேக் சர்மா - 41 சிக்சர்கள்
  • அதிக அரைசதங்களை விளாசிய வீரர் - ரஜத் பட்டிதார் - 3 அரைசதங்கள்
  • அதிக சதங்களை வீரர் - ஜோஸ் பட்லர் - 2
  • அதிவேகமான அரைசதம் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் - 15 பந்துகளில்
  • அதிவேகமான சதம் - டிராவிஸ் ஹெட் - 39 பந்துகளில்
  • அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 124* ரன்கள்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் - டாப் 5:

1. ஹர்ஷல் படேல் - 24 விக்கெட்டுகள்

2. ஜஸ்பிரித் பும்ரா - 20 விக்கெட்டுகள்

3. அர்ஷ்தீப் சிங் - 19 விக்கெட்டுகள்

4. வருண் சக்ரவர்த்தி - 18 விக்கெட்டுகள்

5. துஷார் தேஷ்பாண்டே - 17 விக்கெட்டுகள்

பந்துவீச்சில் மற்ற சாதனை விவரங்கள்:

  • அதிகப்படியான மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் - புவனேஷ்வர் குமார் - 2
  • அதிகப்படியான டாட் பால்களை வீசிய வீரர் - ஜஸ்பிரித் பும்ரா - 149
  • 10 போட்டிகளுக்கு மேல் பந்துவீசி சிறந்த எகானமி - ஜஸ்பிரித் பும்ரா - 6.48
  • ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சு - சந்தீப் சர்மா - 18/5

கவனிக்கத்தக்க சில சாதனைகள்:

  • பெங்களூர் அணிக்கு எதிராக ஐதராபாத் குவித்த 287 ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக உருவெடுத்துள்ளது.
  • கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை, பஞ்சாப் அணி சேஸ் செய்தது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச சேஸ் ஆகும்.
  • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 166 ரன்களை வெறும் 9.4 ஓவர்களில் எட்டி, ஐபிஎல் வரலாற்றில் 150+ ரன்களை மிக வேகமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்தது.
  • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த, தொடக்க வீரர்களாக களமிறங்கி இருவரும் சதமடித்த முதல் இந்திய வீரர்கள் என்ற சாதனையை சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் படைத்தனர். 
  • அதிகப்படியான 200+ ரன்கள் எடுத்த தொடராக நடப்பாண்டு ஐபிஎல் மாறியுள்ளது.
  • அதிகப்படியான சிக்சர்களை விளாசிய அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 160
Continues below advertisement