17வது ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய பெங்களூரு அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் சேர்த்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
மூன்று ஓவர்கள் முடிந்த நிலையில் விராட் கோலி 9 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரியும் மொத்தம் 19 ரன்கள் குவித்தார். இந்த 19 ரன்களில் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
- ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் விராட் கோலி இன்று விளாசிய பவுண்டரி மூலம் ஐபிஎல் தொடரில் 700வது பவுண்டரியை விளாசினார். இதன் மூலம் 700 பவுண்டரிகள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதேபோல் தற்போது விளாசியுள்ள இரண்டு சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் 269 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
- விராட் கோலி 19 ரன்கள் குவித்ததன் மூலம் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் 3000 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும், ஒரு மைதானத்தில் 3000 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.