நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு லீக் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதும் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணி நிர்ணயிக்கும் இலக்கை பெங்களூரு அணி 18.1 ஓவரில் எட்டினால் ப்ளேஆஃப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெறும்.


இல்லை என்றால் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்த வேண்டும், இவ்வாறு வீழ்த்தினால் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மேற்குறிப்பிட்ட வித்தியாசங்களைவிடக் குறைவான வித்தியாசங்களில் சென்னை அணி தோல்வியைச் சந்தித்தால், சென்னை அணியே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். 


இவ்வளவு இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்க தயாராகிக் கொண்டு இருக்கும்போது இந்த போட்டிக்காக ஆவலாக காத்துக்கொண்டு இருக்கும் ரசிகர்கள் மனதில் இடியை இறக்கியதைப் போல், வானிலை நிலவரம் குறித்த அறிவிப்புகளை தினந்தோறும் கூறி வருகின்றனர்.


வானிலை தொடர்பான செய்திகள் அனைத்தும் சென்னை அணிக்கு சாதகமானதாக இருப்பதால் சென்னை அணி ரசிகர்கள் குஷியாக உள்ளனர். மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும், இதன் காரணமாக சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது எளிதாகிவிடும். இதன் காரணமாக பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழப்பதுடன் 17வது ஆண்டாக கோப்பையை வெல்லும் வாய்ப்பினை தவறவிடும். 


இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணி ரசிகர்கள் உட்பட பல மீம் கிரியேட்டர்கள் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குறித்தும் போட்டி மழையால் தடுபடுவது குறித்தும் நகைப்புக்குரிய வகையில் பல மீம்களை உருவாக்கி சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இப்படியான மீம்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. அப்படியான மீம்களை இங்கு காணலாம். 


கில்லி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம். 






கடும் மழைக்கு மத்தியில் போட்டி நடைபெறுவதைப் போன்ற மீம். 






மழையில் போட்டி நடைபெற்றால் வீரர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது போன்ற மீம்






 


மழையால் ஆட்டம் ரத்தானால் சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என சென்னை ரசிகர்களும் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி  நடைபெற்றால் பெங்களூரு அணி எவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதை விளக்கும் மீம் இது. 






தோனியை விராட் கோலி வெட்டுவதைப் போன்ற மீம். 






தோனியை பெங்களூரு அணி வீரர்கள் மிரட்டுவதைப் போன்ற மீம். 






 


வானத்துப்போல படத்தின் காட்சியைக் கொண்டு தோனி மற்றும் டூ ப்ளெசிஸை மைய்யப்படுத்திய மீம். 






 


அனிமல் படக் காட்சியை மைய்யப்படுத்தி விராட் கோலியும் தோனியும் மோதிக்கொள்வதைப் போன்ற மீம்.