17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. களமிறங்கிய 10 அணிகளில் கொல்கத்தா அணி மட்டும் தனது ப்ளேஆஃப் சுற்றினை உறுதி செய்துள்ளது. அடுத்த மூன்று அணிகள் எவை எவை என்பதை தீர்மானிக்கும் லீக் போட்டிகள் இந்த வாரத்தின் இறுதி வரை நடைபெறவுள்ளது. 


ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை ஏற்கனவே மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் இழந்துவிட்டதால், மீதமுள்ள 6 அணிகள் மூன்று இடங்களுக்கு பலப்பரீட்சை நடத்திவருகின்றது. இதில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளில் நல்ல ரன்ரேட்டில் இருக்கும் அணிகளாக இருப்பதால், இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிமீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடைடிலான போட்டி வரும் 18ஆம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலோ அல்லது 18.1 ஓவரில் சென்னை அணி நிர்ணயிக்கும் இலக்கை எட்டினாலோ ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாப்பினைப் பெறும். 






இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடைடிலான போட்டிக்கு இன்னும் 4 நாட்கள் முழுமையாக இருப்பதால் பெங்களூரு அணி நிர்வாகம் வீரர்களுக்கு உள்ள மன அழுத்தத்தை குறைக்க அவர்களை மாலத்தீவுக்கு அழைத்துச் சென்று உற்சாகமூட்டியுள்ளது. இதனால் வீரர்களின் மன அழுத்தம் குறைந்த சென்னை எதிராக களமிறங்கும்போது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது என அணி நிர்வாகம் கருதியிருக்கலாம் என கூறப்படுகின்றது.