ஐபிஎல் 2024ன் 44வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்றது. லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லக்னோவுக்கு எதிரான போட்டிக்கு முன்பே ராஜஸ்தான் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்த சீசனில் ராஜஸ்தானின் 8வது வெற்றி இதுவாகும்.
மறுபுறம், தோல்வியடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 9வது போட்டியில் லக்னோ பெற்ற நான்காவது தோல்வி இதுவாகும். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அனி 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே 6 மற்றும் 7 இடத்தில் உள்ளது. தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தலா 6 புள்ளிகளுடன் முறையே 8வது மற்றும் 9வது இடத்தில் உள்ளது.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
புள்ளிகள் அட்டவணை:
தரவரிசை |
அணிகள் |
போட்டிகள் |
வெற்றி |
தோல்வி |
புள்ளிகள் |
நிகர ரன் ரேட் |
1 |
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) |
9 |
8 |
1 |
16 |
+0.694 |
2 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) |
8 |
5 |
3 |
10 |
+0.972 |
3 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) |
7 |
5 |
2 |
10 |
+0.914 |
4 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) |
9 |
5 |
4 |
10 |
+0.059 |
5 |
டெல்லி கேப்பிடல்ஸ் (DC) |
10 |
5 |
5 |
10 |
-0.276 |
6 |
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) |
8 |
4 |
4 |
8 |
+0.415 |
7 |
குஜராத் டைட்டன்ஸ் (GT) |
9 |
4 |
5 |
8 |
-0.974 |
8 |
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) |
9 |
3 |
6 |
6 |
-0.187 |
9 |
மும்பை இந்தியன்ஸ் (MI) |
9 |
3 |
6 |
6 |
-0.261 |
10 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) |
9 |
2 |
7 |
4 |
-0.721 |
ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்:
1. விராட் கோலி (RCB): 430 ரன்கள், சராசரி: 61.43, அதிகபட்ச ஸ்கோர்: 113*, ஸ்ட்ரைக் ரேட்: 145.76, 1 சதம், 3 அரைசதம்
2. சஞ்சு சாம்சன் (RR): 385 ரன்கள், சராசரி: 77.00, அதிகபட்ச ஸ்கோர்: 82*, ஸ்ட்ரைக் ரேட்: 161.08, 4 அரைசதம்
3. கேஎல் ராகுல் (LSG): 378 ரன்கள், சராசரி: 42.00, அதிகபட்ச ஸ்கோர்: 82, ஸ்ட்ரைக் ரேட்: 144.27, 3 அரைசதம்
4. ரிஷப் பந்த் (DC): 371 ரன்கள், சராசரி: 46.38, அதிகபட்ச ஸ்கோர்: 46.38,ஸ்ட்ரைக் ரேட்: 160.60, 3 அரைசதம்
5. சுனில் நரைன் (KKR): 357 ரன்கள், சராசரி: 44.63, அதிகபட்ச ஸ்கோர்: 109, ஸ்ட்ரைக் ரேட்: 184.02, 1 சதம், 2 அரைசதம்
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 430 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்:
1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 14 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 5/21, சராசரி: 17.07, எகானமி: 6.63.
2. ஹர்ஷல் படேல் (PBKS): 14 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 3/15, சராசரி: 23. , எகானமி: 10.18.
3. யுஸ்வேந்திர சாஹல் (RR): 13 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 20.38, எகானமி: 8.83.
4. முகேஷ் குமார் (DC): 13 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 20.38, எகானமி: 8.83.
5. குல்தீப் யாதவ் (DC): 12 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 3/14, சராசரி: 21.69, எகானமி: 11.05.
ஐபிஎல் 2024 மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா தற்போது அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான பட்டியலில் 14 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப்பை வைத்துள்ளார்.