ஐபிஎல் 2024ன் 32வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இன்று (ஏப்ரல் 18ம் தேதி) மகாராஜா யாத்வேந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது.
பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் மும்பை அணி 6 போட்டிகளில் 2ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையே இன்றைய நாளில் கடும் போட்டி நிலவும்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான நேருக்கு நேர் மோதலில் இதுவரை 31 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், பஞ்சாப் அணி 15 போட்டிகளிலும், மும்பை அணி 16 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது இரு அணிகளுக்கும் இடையில் வெற்றி வித்தியாசத்தில் பெரிய வித்தியாசம் இல்லை.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 230 ரன்களாக உள்ளது. அதே நேரத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் 223 ரன்களாக உள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதும் இந்த போட்டி பஞ்சாபில் மகாராஜா யாத்வேந்திர சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டியின் தொடக்கம் முதலே வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். மேலும், இங்கு சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசலாம். இத்தகைய சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீசலாம். இந்த ஸ்டேடியத்தில் 170 முதல் 180 ரன்கள் மட்டுமே போதுமானதாக பார்க்கப்படுகிறது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சில மேஜிக்களை நிகழ்த்தலாம்.
மொஹாலியில் இதுவரை 3 போட்டிகள்:
மொஹாலியில் உள்ள மகாராஜ் யாத்வேந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்துள்ளன. இதில், ஒரு போட்டி மாலையிலும், இரண்டு போட்டி இரவிலும் நடந்தது. பஞ்சாப் அணி சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பின்னர், டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 180 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் பின்னர், இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 147 ரன்களை எடுத்தது. பதிலுக்கு ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. குறைந்த ரன் எடுத்தாலும் கடைசி ஓவர் வரை இந்த போட்டி நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ்:
ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டெய்டே, பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா.
மும்பை இந்தியன்ஸ்
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), முகமது நபி, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா.