PBKS vs DC LIVE Score: வெற்றியோடு தொடங்கிய பஞ்சாப்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி!
PBKS vs DC LIVE Score, IPL 2024: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
19.2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கலீல் அகமது 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை டெல்லி பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
அதிரடியாக விளையாடி வந்த சாம் கரன் தனது விக்கெட்டினை 47 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்த நிலையில் கலீல் அகமது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார்.
பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது.
பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
சாம் கரன் இந்த ஐபிஎல் தொடரின் முதல் அரைசததினை 39 பந்துகளில் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவர் விளாசும் 4வது அரைசதம் இது.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. பஞ்சாப் வெற்றி பெற 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்படுகின்றது.
14 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் ஜிதேஷ் சர்மா தனது விக்கெட்டினை 9 ரன்னில் இழந்து வெளியேறினார்.
பஞ்சாப் அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது.
11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. மீதம் உள்ள 10 ஓவர்களில் பஞ்சாப் 88 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெறும்.
பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் பிரப்சிம்ரன் தனது விக்கெட்டினை 26 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் இழந்து வெளியேறினார்.
பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் என இருவரும் 20 ரன்னில் உள்ளனர்.
பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் அதாவது 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணியின் முதன்மையான பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பீல்டிங் செய்தபோது ஏற்பட்ட காயத்தினால் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டினை இழந்து 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணி போட்டியில் 4வது ஓவரிலேயே தனது இரண்டாவது விக்கெட்டினை இழந்துள்ளது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பேரிஸ்டோவ் தங்களது விக்கெடினை இஷாந்த் சர்மா பந்தில் இழந்து வெளியேறினர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் டெல்லி அணியின் பவுலர் இஷாந் சர்மா பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 16 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.
3 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணி வெற்றி பெற இன்னும் 18 ஓவர்களில் 150 ரன்கள் தேவைப்படுகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது.
175 ரன்கள் இலக்கை நோக்கு பஞ்சாப் அணி களமிறங்கி விளையாடி வருகின்றது.
முதல் ஓவர் முடிவிலேயே பஞ்சாப் அணி 17 ரன்களை குவித்து அதிரடியான தொடக்கத்தை பெற்றுள்ளது
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்துள்ளது. இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய போரல் 10 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
கடைசி ஓவரில் டெல்லி அணி மட்டும் 25 ரன்கள் சேர்த்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் சேர்த்தது. இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய போரல் கடைசி ஓவரில் மட்டும் 3 பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசினார்.
பஞ்சாப் அணி தனது இம்பேக்ட் ப்ளேயராக, அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக பிரப்சிம்ரனை களமிறக்கியுள்ளது.
டெல்லி அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி அணி தனது 8வது விக்கெட்டினை 18.3 ஓவர்களில் 147 ரன்களில் இருந்த போது இழந்தது.
டெல்லி அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அபிஷேக் போரால் டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் விளையாடி வந்த அக்ஷர் பட்டேல் தனது விக்கெட்டினை 13 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் இழந்து வெளியேறினார்.
17 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டப்ஸ் தனது விக்கெட்டினை 16வது ஓவரில் 8 பந்துகளுக்கு 5 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி அணி 111 ரன்னில் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.
டெல்லி அணி 13.2 ஓவரில் 111 ரன்னில் தனது 5வது விக்கெட்டினை இழந்து தத்தளித்து வருகின்றது.
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது விக்கெட்டினை 13 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது.
11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 25 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார்.
10.3 ஓவர்களில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ரிஷப் பண்ட் களமிறங்கியது முதல் நிதானமாக விளையாடி வருகின்றார்.
டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணி 8 ஓவரில் 74 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டினை இழந்ததால், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார்.
ஹர்சல் பட்டேல் வீசிய 8வது ஓவரில் டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தனது விக்கெட்டினை 21 பந்தில் 29 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டினை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 454 நாட்களுக்குப் பின்னர் ஐபிஎல் போட்டியில் விளையாடுகின்றார். விபத்து காரணமாக கடந்த ஆண்டு விளையாடவில்லை.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்துள்ளது.
Background
PBKS vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி, மொகாலியில் நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணியை, சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில், இதுவரை கோப்பையை வென்றிடாத ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி - பஞ்சாப் மோதல்:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசயிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் கண்டுகளிக்கலாம்.
பிளேயிங் லெவன்:
பஞ்சாப்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (WK), ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங்.
இம்பேக்ட் பிளேயர்ஸ்: ரிலீ ரோசோவ், பிரப்சிம்ரன் சிங், தனய் தியாகராஜன், ஹர்பிரீத் சிங், வித்வத் கவேரப்பா.
டெல்லி: ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா
இம்பேக்ட் பிளேயர்ஸ்: அபிஷேக் போரல், முகேஷ் குமார், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், விக்கி ஒஸ்ட்வால், பிரவின் துபே
நேருக்கு நேர்:
இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தலா 16 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் டெல்லி அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 231 ரன்களையும் குறைந்தபட்சமாக 67 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 104 ரன்களையும் சேர்த்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் விளையாடிய 5 போட்டிகளில் டெல்லி நான்கு போட்டிகளிலும், பஞ்சாப் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
மொகாலி மைதானம் எப்படி?
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக மொகாலி அறியப்படுகிறது. அதேநேரம், அண்மைக் காலமாக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்கும் மைதானமாகவும் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -