PBKS vs CSK LIVE Score: 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது சி.எஸ்.கே!

IPL 2024, PBKS vs CSK LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியின் லைவ் ஸ்கோரை இங்கே காணலாம்

மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 05 May 2024 06:54 PM
PBKS vs CSK LIVE Score: ராகுல் சஹார் அவுட்!

ராகுல் சஹார் 16 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்துள்ளார்.

PBKS vs CSK LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்களில் முடிந்த நிலையில் 118 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: ஹர்ஷல் படேல் அவுட்!

ஹர்ஷல் படேல் 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

PBKS vs CSK LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7  விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: அசுதோஷ் சம்ரா அவுட்!

அசுதோஷ் சர்மா 3 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையைகட்டினார்.

PBKS vs CSK LIVE Score: சாம் கர்ரண் அவுட்!

11 பந்துகள் களத்தில் நின்ற சாம் கர்ரண் 7 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

PBKS vs CSK LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

PBKS vs CSK LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

PBKS vs CSK LIVE Score: ஜிதேஷ் சர்மா அவுட்!

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

PBKS vs CSK LIVE Score: பிரப்சிம்ரன் சிங் அவுட்!

23 பந்துகள் களத்தில் நின்ற பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

PBKS vs CSK LIVE Score: ஷஷாங்க் சிங் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த ஷஷாங்க் சிங் 20 பந்துகள் களத்தில் நின்று 27 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

PBKS vs CSK LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட்டுகள் 49 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: ரிலீ ரோசோவ் அவுட்!

ரிலீ ரோசோவ் மூன்று பந்துகள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

PBKS vs CSK LIVE Score: ஜானி பேர்ஸ்டோவ் அவுட்!

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

PBKS vs CSK LIVE Score: இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப்!

பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கியுள்ளனர்.

PBKS vs CSK LIVE Score: 168 ரன்கள் இலக்கு!

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: தோனி அவுட்!

கோல்டன் டக் அவுட் ஆனார் எம்.எஸ்.தோனி

PBKS vs CSK LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 149 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

PBKS vs CSK LIVE Score: சாண்ட்னர் அவுட்!

சென்னை வீரர் சாண்ட்னர் விக்கெட்டை பறிகொடுத்தார்.

PBKS vs CSK LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் 117 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

PBKS vs CSK LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

PBKS vs CSK LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 103 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: மொயின் அலி அவுட்!

சென்னை அணி வீரர் மொயின் அலி 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

PBKS vs CSK LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 99 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 79 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

PBKS vs CSK LIVE Score: மிட்செல் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

PBKS vs CSK LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: ஷிவம் துபே அவுட்!

கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார் ஷிவம் துபே

PBKS vs CSK LIVE Score: ருதுராஜ் கெய்க்வாட் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார்.

PBKS vs CSK LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 60 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

PBKS vs CSK LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

PBKS vs CSK LIVE Score: 3 ஓவர்கள் முடிந்தது!

3 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: 2 ஓவர்கள் முடிந்தது!

2 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

PBKS vs CSK LIVE Score: ரஹானே அவுட்!

7 பந்துகள் களத்தில் நின்ற ரஹானே 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்

PBKS vs CSK LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கியுள்ளனர்.

Background

ஐபிஎல் சீசன் 17:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 52 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது. மீதமுள்ள 9 அணிகளும் 4 இடங்களுக்காக முட்டி மோதி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் சாம் கர்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.


சென்னை - பஞ்சாப் பலப்பரீட்சை:


இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில், மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஐந்தில் வென்று,  புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளில்  மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் பஞ்சாப் அணியுடனான தோல்வியும் அடங்கும்.  இதனால், இன்றைய போட்டியில் வென்று பழிதீர்ப்பதோடு,  பிளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைக்கவும் சென்னை அணி  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பஞ்சாப் அணியோ 10 போட்டிகளில் விளையாடி நான்கில்  மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம். சென்னை அணிக்கு எதிராக களம் கண்ட கடைசி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள உத்வேகத்துடன் பஞ்சாப் அணி இன்று களமிறங்குகிறது. 


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பஞ்சாப் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த அந்த அணி, கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், கடந்த இரண்டு போட்டிகளில் செயல்பட்டதை போன்றே,  செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணியால் வாகை சூட முடியும். பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தூண்களாக மாற்யுள்ளனர். பந்துவீச்சில் அந்த அணி இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


பவர்பிளேயில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ரகானேவை பிளேயிங்லெவனில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்களே கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே நல்ல ஃபார்மில் உள்ளனர். சாஹர் காயமடைந்து இருப்பது, முஸ்தஃபிசுர் சொந்த ஊர் திரும்பி இருப்பது சென்னை அணியின் பவுலிங் யூனிட்டை மேலும் வலுவிழக்கச் செய்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெல்ல சென்னை அணி கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 231 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 240 ரன்களையும், குறைந்தபட்சமாக 120 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


டாஸ் வென்ற பஞ்சாப் அணி:


தர்மசாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களால் விரும்பப்படும் மைதானங்களில் ஒன்றாகும். இது வேகம் மற்றும் பவுன்சர்களுக்கு பெயர் பெற்றது. முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுத்து, எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதே சிறந்த முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.


பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)


ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் கர்ரன்(கேப்டன்) , ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர் ), அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்


சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)


அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன் ), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளீசன், துஷார் தேஷ்பாண்டே


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.