ஐ.பி.எல் சீசன் 17:


.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தெலங்கானா மாநிலம் ராஜீவ்காந்தி மைதானத்தில் 18 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.  இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டன்ஷி எம்.எஸ். தோனியை போல இருந்தது என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.


தொடர்ந்து அசத்தும் கம்மின்ஸ்:


முன்னதாக நேற்றைய போட்டியின் போது டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 10 ஓவர்களுக்கு நன்றாக விளையாடியது. ஆனால் டெத் ஓவர்களில் அவர்களால் ரன்களை எடுக்க முடியவில்லை. மைதானம் மெதுவாக இருந்ததை பயன்படுத்தி பந்து வீச்சாளர்களை இன்னும் ஸ்லோவாக பந்து வீச வைத்தார் பேட் கம்மின்ஸ். அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லெப்ட் கேண்ட் பேட்ஸ்மேன்களான ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினார்கள்.


மைதானம் மெதுவாக இருந்த சமயத்தில் கூட இவர்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னர் மார்க்ராமை பேட் கம்மின்ஸ் பந்து வீச வைக்க வில்லை. வேகப்பந்து வீச்சாளர்களையே தொடர்ந்து மெதுவாக வீச வைத்தார். அதேபோல், மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் திரிபாதி இருவரையும் அணியில் தேர்வு செய்யவில்லை. இவர்களுக்கு பதிலாக  நிதிஷ் ரெட்டியை கொண்டு வந்தார். அபிஷேக் சர்மாவை துவக்க வீரராக களம் இற்க்கினார். இந்த அணுகுமுறை தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


தோனியைப் போல் செயல்படுகிறார்:


இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி இது குறித்து பேசியுள்ளார், “பேட் கம்மின்ஸிடம் எனக்கு பிடித்த விஷயம் அவர் எம்.எஸ். தோனி போலவே செயல்படுகிறார். நாம் ஏன் இப்படி யோசிக்கவில்லை என்பது போல நாம் நினைக்கும் அளவுக்கு அவர் முடிவுகளை எடுக்கிறார். நேற்று அவர்கள் முடிவெடுப்பதற்கு வேறு வழிகள் இருந்த போதிலும், இவர் முடிவு செய்தது வித்தியாசமாக இருந்தது. நேற்றைய போட்டியில் சி.எஸ்.கே. அணியின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னர் எய்டன் மார்க்ரம்மைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் புதிய பந்தில் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமாரையே அவர் தொடர்ந்து பயன்படுத்தினார். அவர் தான் எடுக்கும் முடிவுகள் மிகச் சரியானவை என்று அவரையே அவர் நம்ப வைக்கிறார்என்று கூறியுள்ளார் டாம் மூடி.