இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.


ஐ.பி.எல். 2024:


சம்மர் வந்தாலே ஐபிஎல் ஃபீவர் உலகம் முழுவதும் உள்ள ஐபிஎல் ரசிகர்களை ஆட்கொண்டுவிடும். அந்த ஃபீவர் தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது அணியை தயார் படுத்தி வருகின்றது. 


2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் அணிகளில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கு காரணம் 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையை வென்றதும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ஏலத்தில் எடுத்தது. அன்று முதல் இன்று வரை சென்னை அணி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு இருக்க காரணம் தோனி மட்டும்தான். 






இந்த சீசன் தோனியின் கடைசி சீசன் என ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுவதால் தோனியின் மீதான பார்வை ரசிகர்கள் மத்தியில் வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக தோனி சென்னை வந்த நிலையில், இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி முதல் தோனி பயிற்சியைத் தொடங்க சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளார். பேருந்தில் சேப்பாக்கத்தை நோக்கி தோனி பயணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 






முதல் போட்டியே சென்னையில் நடைபெற உள்ளது ஐபிஎல் ரசிகர்கள் மட்டும் இன்றி தோனி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளதுஅதற்கான காரணம் தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல் தொடராக இந்த தொடர் தான் இருக்கும் என்று கருதப்படுகிறதுஆனால்தோனி 40 வயதை கடந்தாலும் பிட்னஸ் உடன் இருப்பதால் அவர் கண்டிப்பாக இன்னும் ஒரு சில ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறதுஅதே நேரம் அடுத்த சீசனில் விளையாடுவது பற்றி தோனி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லைஇந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சி மேற்கொள்வதற்காக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை வந்தார்அப்போது விமானநிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.