ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 நாளை (மார்ச் 22) ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இச்சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியை அந்த அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளது. முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறார். முதல் சீசனில் இருந்தே அந்த அணியின் கேப்டனாகத்தான் தோனி செயல்பட்டு வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் திடீரென தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
அப்போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சீசனின் போது கூட ஜடேஜாவின் அபார ஆட்டதால் தான் சிஎஸ்கே அணி கடைசி பந்தில் வெற்றியை பெற்றது. இதனால் ஜடேஜாவுக்கு தான் இம்முறை கேப்டன் பதவி வழங்கப்படும் என்று நம்பப்பட்டது. இச்சூழலில் தான் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் எம்.எஸ்.தோனி இதுவரை 133 போட்டிகளில் அவர் சார்ந்த அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இருக்கிறார். இதுவரை அவர் 87 போட்டிகளில் கேப்டனாக இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கெளதம் கம்பீர். இதுவரை அவர் கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் 71 போட்டிகள் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி. இதுவரை விராட் கோலி கேப்டனாக இருந்த அவர் 66 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறை! வீரர்களாக மட்டும் களம் காணும் 3 ஜாம்பவான்கள்!