17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ரா ஓவரில் விராட் கோலி, டூ ப்ளெசிஸ், மகிபால் லோம்ரோர், சௌரௌவ் சௌஹான் மற்றும் விஜயகுமார் வைஷாக் என மொத்தம் 5 பேர் தங்களது விக்கெட்டினை இழந்தனர்.


நடப்பு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக பும்ரா உருவாகியுள்ளார். நான்கு ஓவர்கள் வீசிய பும்ரா 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 


பும்ரா தான் வீசிய முதல் ஓவரில் அதாவது போட்டியின் மூன்றாவது ஓவரில் விராட் கோலியின் விக்கெட்டினை கைப்பற்றினார். இதன் மூலம் வீராட் கோலியின் விக்கெட்டினை ஐபிஎல் தொடரில் 5 முறை கைப்பற்றிய பந்து வீச்சாளரனார் பும்ரா. 


அதன் பின்னர் ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய பும்ரா அந்த ஓவரில் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆட்டத்தின் டெத் ஓவர்கள் எனப்படும் 16 முதல் 20 ஓவர்களுக்கு இடையில், 17 மற்றும் 19வது ஓவரை பும்ரா வீசினார். 


அதில் 17வது ஓவரில் பெங்களூரு அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் மற்றும் மகிபால் லோம்ரர் விக்கெட்டினை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினார். இதையடுத்து பும்ரா 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் பெங்களூரு அணியின் இம்பேக்ட் ப்ளேயர் சௌரவ் சௌஹான் மற்றும் விஜயகுமார் வைஷாக் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். 


இதனால் இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆரஞ்சு தொப்பியை தனதாக்கியுள்ளார்.