IPL 2024 MI Vs GT LIVE Score: மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2024 MI Vs GT LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தனது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்து வருகின்றது.
ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை 4 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
கோட்ஸீ தனது விக்கெட்டினை 19வது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 10 பந்தில் 21 ரன்கள் தேவைப்படுகின்றது.
திலக் வர்மா தனது விக்கெட்டினை 19வது ஓவரின் இரண்டாவது பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 19 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.
டிம் டேவிட் போட்டின் 18வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டினை 10 பந்தில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
பிரெவிஸ் தனது விக்கெட்டினை மோஹித் சர்மா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் 38 பந்தில் 46 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்துள்ளது.
ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 29 பந்தில் 43 ரன்கள் சேர்த்த நிலையில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார்.
11.1 ஓவரில் மும்பை அணி 100 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டினை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 4.1 ஓவரில் 2 விக்கெட்டினை இழந்து 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடிய நமன் தீர் தனது விக்கெட்டினை மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில் இழந்தார். மும்பை அணியின் இஷான் கிஷன் மற்றும் நமன் தீர் ஆகியோர் அவுட் ஆகியுள்ளனர்.
குஜராத் அணியின் மூன்றாவது ஓவரை மும்பை அணியின் நமன் தீர் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட்டினை இழந்து 11 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டினை இழந்து இரண்டு ரன்கள் சேர்த்துள்ளது.
இஷான் கிஷான் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரில் ஓமர்சாய் பந்தில் வெளியேறினார்.
169 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 168 ரன்கள் சேர்த்தது.
குஜராத் அணி 20வது ஓவரின் முதல் பந்தில் தனது 6வது விக்கெட்டினை இழந்துள்ளது. அதிரடி ஆட்டக்காரர் ராகுல் திவேட்டிய தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 15 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார்.
19 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது.
பும்ரா வீசிய 17வது ஓவரில் மில்லர் மற்றும் சாய் சுதர்சன் தங்களது விக்கெட்டினை இழந்தனர். அந்த ஓவரின் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வந்த மில்லர் தனது விக்கெட்டினை பும்ரா பந்தில் இழந்து வெளியேறினார். மில்லர் 11 பந்தில் 12 ரன்கள் சேர்த்திருந்தார்.
15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 106 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த குஜராத் அணி வீரர் அஸ்மத்துல்லா உமர்சாய் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
11 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் (26) அஸ்மத்துல்லா ஒமர்சாய் 16 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 69 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி 6.4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் நான்காவது ஓவரில் சாஹா தனது விக்கெட்டினை பும்ரா பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
மூன்று ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டது குஜராத் அணி.
குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கிவிட்டது.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, லூக் வுட்
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): ஷுப்மான் கில்(கேப்டன்), விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): ஷுப்மான் கில்(கேப்டன்), விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
17வது ஐபிஎல் சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் 5வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று அதாவது மார்ச் மாதம் 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் கடந்த 11 ஆண்டுகளாக தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெறுமா என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணியும் குஜராத் அணியும் தங்களது அணிக்கு சிறப்பான வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களது அணியை வலுப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மும்பை அணி தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கோட்ஸியை அணியில் சேர்த்துள்ளது. அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியினை வழிநடத்திக் கொண்டு வந்த ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் இருந்து ட்ரேட் செய்தது. இதுமட்டும் இல்லாமல் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பையும் வழங்கியுள்ளது. மேலும் தன்னிடம் இருந்த கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விற்றது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் அந்த அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் குஜராத் அணியை வழிநடத்தவுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவர 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றியை தனதாக்கியுள்ளன. குஜராத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 218 ரன்களையும், குறைந்தபட்சமாக 152 ரன்களையும் எடுத்துள்ளது. அதேநேரம், மும்பை அணிக்கு எதிராக குஜராத் ஜெயிண்ட்ஸ்ஸ் அணி அதிகபட்சமாக 233 ரன்களையும், குறைந்தபட்சமாக 172 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற அதிகப்படியான முயற்சியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -