மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்காக ரோகித்சர்மா, இஷன் கிஷன், டிம் டேவிட்டின் அதிரடியுடன் கடைசி கட்டத்தில் ஷெப்பர்டின் அதிரடியால் 234 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 235 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்காக பிரித்வி – வார்னர் ஆட்டத்தை தொடங்கினர்.


ஆபத்தான வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களில் அவுட்டாக, பிரித்விஷா அதிரடியாக ஆடினார். அவருக்கு அபிஷேக் போரல் ஒத்துழைப்பு அளித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய பிரித்வி ஷா பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். இதனால், அவர் அரைசதம் விளாசினார்.


பிரித்வி ஷாவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக அபாரமாக ஆடிய போரல் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார், இதனால், டெல்லி அணி 10 ஓவர்களில் 94 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய அபிஷேக் போரல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மும்பை வீரர் கோட்ஸி தவறவிட்டார். அவர் கேட்சை மும்பை தவறவிட்ட அடுத்த ஓவரிலே மும்பை பிரித்வி ஷா விக்கெட்டை கைப்பற்றியது.


மும்பையை அச்சுறுத்திய பிரித்விஷாவை பும்ரா தனது வேகப்பந்தால் போல்டாக்கினார். பும்ரா வீசிய யார்க்கரில் பிரித்விஷாவிற்கு ஸ்டம்ப் பறந்தது. பிரித்விஷா 40 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து ஸ்டப்ஸ் களமிறங்கினார்.


கட்டாயம் அடித்தே ஆக வேண்டும் என்ற சூழலில் களமிறங்கிய ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடினார். பியூஷ் சாவ்லா வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 13 ஓவர்களில் 127 ரன்களை டெல்லி எட்டியது. கடைசி 42 பந்துகளில் 108 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், போரலும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். ஆனாலும், டெல்லிக்கு நெருக்கடி தரும் விதமாக பும்ரா பந்துவீசினார். அவரது பந்துவீச்சுக்கு பலனாக அதிரடியாக ஆட முயற்சித்த அபிஷேக் போரல் அவுட்டானார். 15 ஓவர்களுக்கு 144 ரன்களுக்கு 3 விக்கெட்டை டெல்லி இழந்தது.


கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 91 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டப்ஸ் சிக்ஸராக விளாசினார். ஆனால், டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் 1 ரன்னில் அவுட்டானார். ரிஷப்பண்ட் ஆட்டமிழந்தாலும் ஸ்டப்ஸ் தனி ஆளாக அசத்தினார். அவர் பவுண்டரி, சிக்ஸராக விளாசினார். இதனால், அவர் 19 பந்துகளில் அரைசதம் விளாசினார்.


கடைசி 12 பந்துகளில் 55 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டப்ஸ் சிக்ஸராக விளாசினார். 19வது ஓவரில் ஸ்டப்ஸ் சிக்ஸர், பவுண்டரியாக விளாசினார். கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரின் முதல அபாரமாக ஆடி வந்த ஸ்டப்ஸ் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளவில்லை. அந்த ஓவரில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 3 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த தொடரில் ஹாட்ரிக் தோல்வி கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். டெல்லி அணிக்காக கடைசி வரை போராடிய ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்ஸருடன் 71 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். கோட்ஸி கடைசி ஓவரில் 3 விக்கெட் கைப்பற்றியது உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.