IPL 2024 MI vs CSK: பேட்டிங் செய்ய களமிறங்கும் சென்னை; டாஸ் வென்ற மும்பை.. பந்து வீச முடிவு!

IPL 2024 MI vs CSK: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

Continues below advertisement

17வது ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Continues below advertisement

நடப்பு ஐபில் தொடர் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் லீக் சுற்றில் ஒரு முறை மோதுகின்றது. இதனாலே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வழக்கத்தை விடவும் அதிகமானது. 

இரு அணிகளும் இதுவரை மொத்தம் 38 போட்டிகளில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்துள்ளது.  இதில்  மும்பை இந்தியன்ஸ் அணி 21 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் மோதியுள்ளது. அதிலும் மும்பை அணியின் கரங்களே உயர்ந்துள்ளது. அதாவது மும்பை அணி 7 போட்டிகளிலும் சென்னை அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகளில் சென்னை அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மும்பை அணி தோல்வியைச் சந்தித்தது.

இரு அணிகளும் இந்த சீசனில் புது கேப்டன்கள் தலைமையில் விளையாடுவதால் இன்றய போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். 

 

Continues below advertisement