KKR vs LSG Innings Highlights: சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா; 161 ரன்கள் சேர்த்த லக்னோ!

IPL 2024 KKR vs LSG Innings Highlights: லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. 

Continues below advertisement

17வது ஐபிஎல்  தொடரின் 28வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. 

Continues below advertisement

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் இன்னிங்ஸை டி காக் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி லக்னோ அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தினை ஏற்படுத்தினார் டி காக். ஆனால் இரண்டாவது ஒவரில் டி காக் தனது விக்கெட்டினை வெளியேற, லக்னோ அணி நிதான ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. 

மூன்றாவது வீரராக களமிறங்கிய ஹூடாவும் சொதப்ப லக்னோ அணி நெருக்கடிக்கு உள்ளானது. கேப்டன் ராகுலுடன் இணைந்த பதோனி விக்கெட்டினை இழக்காமல் பொறுப்பாக விளையாடி வந்தார். ஆட்டத்தின் 11வது ஓவரில் கே.எல். ராகுல் சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஸ்டாய்ன்ஸ் அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை விளாசினாலும், வருண் சக்ரவர்த்தி பந்தில் விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் பிடித்த அட்டகாசமான கேட்சினால் வெளியேறினார். 

அதன் பின்னர் பூரன் களமிறங்கி சிறிது நேரத்தில் பதோனி வெளியேறிய பின்னர், பூரனுடன் க்ருனால் பாண்டியா கைகோர்த்தார். இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் கொல்கத்தா அணிக்கு பந்து வீசுவதில் சிரமம் இல்லாமல் இருந்தது. இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. 

Continues below advertisement